இரண்டாம் குத்து திரைவிமர்சனம்

18 November 2020, 7:59 pm
Quick Share

பல்வேறு எதிர்பார்ப்புகள் மற்றும் எதிர்ப்புகளுக்கு இடையே சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் இரண்டாம் குத்து திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

வழக்கம் போல இரு இளைஞர்கள் ஒரு கில்மா கோஸ்ட் இருக்கும் பங்களாவிற்கு செல்கிறார்கள்.  அங்கிருக்கும் அந்த பேய்க்கு வெர்ஜின் பசங்களை அனுபவிக்க ஆசை. வழக்கம்போல ஹீரோக்கள் தப்பித்துவிட பேயின் ஆசையை யார் நிறைவேற்றினார்கள் என்பதே படத்தின் கதை.

பெர்ஃபாமென்ஸ்:

இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் இயக்குனராக மட்டுமே பணியாற்றிய சந்தோஷ் பி ஜெயக்குமார் இம்முறை நடிகராகவும் களமிறங்கியிருக்கிறார். அவருக்கு ஆங்காங்கே நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சில காட்சிகளில் ரசிக்கவும் வைத்திருக்கிறார். அடுத்ததாக படத்தின் மிக முக்கியமான நபர்களில் ஒருவர் டேனியல் ஆன்னி போப் இவரது காமெடிகள் மட்டுமே ரசிகர்களுக்கு முதல்பாதியில் ஆறுதலை தருகிறது. இரண்டாம் பாதி முழுவதுமே ரவி மரியாவின் கட்டுப்பாட்டிற்குள் வந்து விடுகிறது. அவரது ஹியூமர் சென்ஸ்,  டைமிங் மற்றும் அடல்ட் காமெடிகள்  ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. படத்தில் ஹீரோயின்களுக்கு அவ்வளவாக வேலை இல்லை. மொட்டை ராஜேந்திரனின் டைமிங் காமெடிகள் ரசிகர்களை ரசிக்க வைத்து இருக்கிறது. இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் மறைமுகமாக சொல்லப்பட்டிருந்த அடல்ட் வசனங்கள் இந்த திரைப்படத்தில் சற்று வெளிப்படையாகவே பேசப்பட்டு இருக்கின்றன.

பலம்: படத்தின் பின்னணி இசை சற்று ஆறுதல் அளிக்கிறது.

இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தைப் பார்த்தவர்கள் இரண்டாம் குத்து படத்தை பார்க்க தேவையே இல்லை. ஏனெனில் ஒரே கதையை நடிகர்களை மட்டுமே மாற்றி அமைத்து எடுத்திருக்கிறார் இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார்.

Verdict : குத்துக்கு ஆசைப்பட்டு மிதி வாங்காமல் இருப்பது நல்லது

ரேட்டிங் : 1.5/5