“ஊரான் வீட்டு தம்பி எல்லாம் ஊட்டி வளர்த்தேனே” வெளியான “இரண்டாம் குத்து” சிங்கிள் !

4 November 2020, 5:52 pm
Quick Share

சில வாரங்களுக்கு ரிலீசான இரண்டாம் குத்து படத்தின் டீஸரை பார்த்து எல்லோரும் முகள் சுழிக்க, சினிமாக்காரர்கள் மட்டும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தார்கள் ( பாரதிராஜாவை தவிர)

இந்த படத்தின் இயக்குனரான சந்தோஷ் பி ஜெயக்குமார் தான் ஹீரோவாகவும் நடித்துள்ளார். மேலும், பிக்பாஸ் பிரபலம் டேனி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதன் டீசரை பார்த்த எல்லோரும் என்ன தான் அடல்ட் படமாக இருந்தாலும் இவ்வளவு ஆபாசம் தேவையா ? என்று கேட்டார்கள்.

இந்நிலையில் இந்த படத்தின் டீசர் தற்போது யூடியூபில் இருந்து தூக்கி விட்டார்கள். மீண்டும் டிரெண்டில் இருப்பதற்காக இந்த படத்தின் சிங்கிள் பாடலான தம்பி என்னும் பாடலை தற்போது வெளியிட்டிருக்கிறார்கள். “ஊரான் வீட்டு தம்பி எல்லாம் ஊட்டி வளர்த்தேனே, என்னோட தம்பி என்னை தலை குனிய வெச்சாயே” என்று ஆரம்பிக்கும் இந்த பாடலை சற்று நேரத்திற்கு மேல் கேட்க முடியவில்லை.

Views: - 33

0

0