ரஷ்யாவில் குளிரில் நடிக்கும் இர்பான் பதான்!

27 February 2021, 10:51 pm
Quick Share

சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா பட த்தின் ரஷ்யா படப்பிடிப்பில் இர்பான் பதான் இணைந்துள்ளார்.

கடாரம் கொண்டான் படத்தைத் தொடர்ந்து தற்போது சியான் விக்ரம் தனது 58ஆவது படமான கோப்ரா படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக கேஜிஎஃப் படத்தில் யாஷிற்கு ஜோடியாக நடித்த நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து வருகிறார். மேலும், ரோபோ ஷங்கர், கே எஸ் ரவிக்குமார், மிர்ணாளினி ரவி ஆகியோர் பலரும் நடிக்கின்றனர். விக்ரம் மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி இருவரும் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

இந்தப் படத்தில் விக்ரம் கிட்டத்தட்ட 15 விதமான கதாபாத்திரங்களில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. அரசியல் தலைவர், ஏரியா தாதா, பிஸினஸ்மேன், சர்ஜ் பாதிரியார், விஞ்ஞானி, மேஜிக் மேன், வாத்தியார் என்று பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. இவர்களுடன் இணைந்து கிரிக்கெட் வீரர் இர்பான் பதானும் நடித்து வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் படத்திற்கு இசையமைத்துள்ளார்.தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் கோப்ரா வெளியாக இருக்கிறது. பட த்தின் அனைத்து காட்சிகளும் முடிக்கப்பட்ட நிலையில், முக்கியமான காட்சிக்கு படக்குழுவினர் ரஷ்யா நாட்டிற்கு சென்றுள்ளனர்.

அங்கு மொராக்கோ பகுதியில் படப்பிடிப்பை மேற்கொண்டு வருகின்றனர். இதில், இர்பான் பதான் கலந்து கொண்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இர்பான் பதான் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பில் விக்ரம் இருப்பதால், விரைவில் ரஷ்யா படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படம் தவிர கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் சியான்60 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தில் துருவ் விக்ரமும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 8

1

0