என் வளர்ச்சி பிடிக்காமல் பிரிந்து சென்றுவிட்டார்… அப்பா குறித்து முதன்முறையாக மனம் திறந்து பேசிய இர்பான்!

Author: Shree
21 July 2023, 12:24 pm

யூடியூப் பிரபலம் மற்றும் உணவு விமர்சகரான இர்பானை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். உணவு விமர்சகர் இர்பான் அவர்கள் பல்வேறு ஹோட்டல்களுக்கு சென்று உணவுகளை சாப்பிட்டு அதனுடைய டேஸ்ட் குறித்தும், உணவின் தரத்தை குறித்தும் வீடியோவாக சோசியல் மீடியாவில் பதிவு இடுவார்.

இதனிடையே சில மாதங்களுக்கு முன்னர் இர்பானுக்கு பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. இத்திருமணத்தில் நண்பர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் கலந்துக்கொண்டார்கள். இதனிடையே திருமணம் ஆன சில நாட்களிலேயே தனது கார் விபத்துக்குள்ளாகி ஒரு அப்பாவி பெண்ணை மோதி அவர் சம்பவ இடத்திலே பலியானார். இந்த செய்தி பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட vlog ஒன்றில் முதன் முறையாக தனது அப்பா குறித்து பேசியுள்ளார். அதாவது, என்னுடைய அப்பா எங்களுடன் இல்லை. எங்களை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். காரணம் நான் யூடியூபர் ஆக இருப்பது அவருக்கு பிடிக்கவில்லை. ஆரம்பத்தில் அவர் வேண்டாம் என கூறினார்.

ஆனால், நான் அவருக்கே தெரியாமல் வீடியோ எடுத்து போடுவேன். இதனால் என் அம்மாவிடம் கத்தி சண்டைபோடுவர். அவர் மிகவும் கோபக்காரர். அதனால் தான் அவரை பற்றி வீடியோக்களில் கூட எதுவும் பேசினதில்லை. அப்படி ஏதாவது பேசினால் திட்டுவாரோன்னு பயம். ஆனால் அவர் மீது எப்போதும் எனக்கு மரியாதை இருக்கிறது.

எங்களுக்குள் என்ன பிரச்சனை இருந்தாலும் அவர் தான் எனக்கு அப்பா. அவர் தான் என்னை வளர்த்தார். அவர் தான் என்னை படிக்க வைத்தார். என் திருமணத்திற்கு கூட வந்தார். நான் தான் பேசி சமாதானம் செய்து வரவைத்தேன் என கூறினார். முதன் முறையாக தனக்கும் தன்னுடைய அப்பாவிற்கும் இப்படி ஒரு பிரச்சனை இருப்பதை வெளிப்படையாக கூறியுள்ள இர்பானை கூடிய சீக்கிரத்தில் அப்பாவுடன் குடும்பமாக வாழ பலர் கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?