மனைவியை விவாகரத்து செய்கிறாரா நடிகர் விஜய்? கிடைத்தது விடை?!!

Author: Udayachandran RadhaKrishnan
9 January 2023, 8:01 pm

நடிகர் விஜய் அவரது மனைவியை விவாகரத்து செய்வதாக தகவல் வெளியான நிலையில், இதற்கான பதில் தற்போது கிடைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் இளைய தளபதி என்று அழைக்கப்படும் நடிகர் விஜய், வெளிநாட்டைச் சேர்ந்த சங்கீதா என்பவரை திருமணம் செய்தார். பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள விஜய் செய்யும் ஒவ்வொரு செயலும் ரசிகர்களால் கவனிக்கப்பட்டு வருகின்றது.

இந்த தம்பதிகளுக்கு சஞ்சய் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் இருக்கும் நிலையில், இருவரும் வெளிநாட்டில் படித்து வருகிறார்கள்.

சமீபத்தில் இவர் சில நிகழ்ச்சிகளுக்கு தனியாக வந்ததால் தற்போது சர்ச்சையில் சிக்கியதோடு, மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாகவும் தகவல் ஒன்று தீயாய் பரவி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

ஆம் சங்கீதா எந்தவொரு நிகழ்ச்சி என்றாலும் விஜய்யுடன் வந்துவிடுவார். ஆனால் அட்லி பிரியா வளைகாப்பு நிகழ்ச்சி மற்றும் வாரீசு பட ஆடியோ வெளியீட்டிற்கும் வராததால் சர்ச்சை எழுந்துள்ளது.

இரண்டு நிகழ்ச்சிக்கும் தொடர்ந்து சங்கீதா வராததால் இருவரும் 22 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு விவாகரத்து பெறுகிறார்களா என சர்ச்சை கிளம்பியது. இந்த சர்ச்சை செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒரு தகவல் வந்துள்ளது.

அதாவது விஜய்யின் மனைவி சங்கீதா தனது மகன் மற்றும் மகளுடன் வெளிநாட்டில் இருந்தாராம். அதனால் தான் விஜய்யுடன் சில நிகழ்ச்சிகளில் வர முடியவில்லை என்ற உண்மை வெளியாகி குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

  • an exciting glimpse video of coolie released கூலி Glimpse வீடியோவில் காணாமல் போன நடிகர்? வலை வீசி தேடும் ரசிகர்கள்! யாரா இருக்கும்?