சிவகார்த்திகேயன் மீது இவ்ளோ வன்மமா? தேவையில்லாமல் சிக்கிக் கொண்ட ரஜினி!!!

Author: Udayachandran RadhaKrishnan
6 May 2023, 6:06 pm

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மாவீரன் படம் வரும் ஆகஸ்ட் 11ஆம்
வெளிவர உள்ளது. இதனால் படக்குழு மிகுந்த உற்சாகத்தில் இருந்து வருகிறது.

ஆனால் அந்த உற்சாகத்தை அப்படியே சோகமாக மாற்ற வைத்தது சன்பிக்சர்ஸ். ஆகஸ்ட் 10ஆம் தேதி ரஜினியின் ஜெயிலர் படம் வெளியாகிறது என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டது.

இதனால் அதிர்ந்து போன சிவகார்த்திகேயனின் மாவீரன் படக்குழு, தேவையில்லாமல் வம்பு வேண்டாம் என ஒதுங்கி கொண்டது. ரஜினியுடன் மோதவேண்டாம் என நினைந்து தன்னுடைய மாவீரன் படத்திற்கு ஜூலை 14ஆம் தேதி வெளியிட முடிவு செய்துவிட்டார் சிவா.

எதற்காக சிவகார்த்திகேயனின் படத்துடன் ரஜினி படத்தை மோதவைக்க சன் பிக்சர்ஸ் திட்டமிட்டது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிப்பதாக இருந்துள்ளார். அப்படத்தை முத்தையா இயக்க போகிறார் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் சிவாவிடம் கூறியுள்ளனர்.

ஆனாலும் படத்தின் கதை கேட்காமல் நிராகரித்துக்கொண்டே இருந்துள்ளார். இதனால் இறுதியில் அப்படம் கைவிடப்பட்டுவிட்டது என கூறப்படுகிறது.

இந்த விஷயத்தினால் சிவகார்த்திகேயனை பழிவாங்க சன் பிக்சர்ஸ் இப்படி செய்துள்ளது என திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது. இருந்தாலும் சிவகார்த்திகேயன் மீது இவ்வளவு வன்மம் ஆகாது என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!