மெர்சல் படம் தோல்வியா? தயாரிப்பாளர் கொடுத்த ஷாக் பதில் : வெளியான வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
11 March 2025, 11:44 am

2017ல் நடிகர் விஜய் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் மாதம்வெளியான படம் மெர்சல். அட்லீ இயக்கத்தில் உருவான இந்த படத்தை தேனாண்டாள் நிறுவனம் TSL என்ற பெயரில் தயாரித்தது.

அதுவரை இராம நாராயணன் கவனித்து வந்த தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் புத்துயிர் பெற்று தரமான படத்தை தயாரிக்க முதன்முதலில் மெர்சல் படத்தை தயாரித்தது.

சமந்தா, காஜல், நித்யா மேனன், கோவை சரளா, வடிவேலு, ராஜேந்திரன் உட்பட பலர் நடிப்பில் வெளியான மெர்சல் படத்தில் விஜய் 3 வேடங்களில் நடித்திருந்தார். 120 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் 260 கோடி ரூபாய் வரை வசூல் ஈட்டியது

Mersal Film is Flop or hit Says Producer Hema Rukmani

இந்த படம் விஜய்க்கு பிளாப் படம் என இணையத்தில் நெட்டிசன்கள் விஜய் ரசிகர்களுடன் சண்டை போட்டு வரும் நிலையில, படத்தின் தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி கொடுத்த பதிலடி வாயை பிளக்க வைத்துள்ளது.

இது குறித்து பேட்டியளித்த ஹேமா ருக்மணி, விஜய்யின் மெர்சல் திரைப்படம் எங்களுக்கு வெற்றி படம் மட்டுமல்ல, பிராண்டாக அமைந்தது. யார் வந்து படத்தை தயாரிக்க முன் வந்தாலும், மெர்சல் தயாரிப்பாளர் என்றே சொல்கின்றனர் எனறு பேசியது வைரலாகி வருகிறது.

  • the reason behind top actors are absent in king kong daughter marriage function ஓடி ஓடி பத்திரிக்கை வச்சி ஒருத்தர் கூட வரல? கிங் காங் வீட்டுத் திருமணத்தில் தலை காட்டாத நடிகர்கள்!