துபாய் தொழிலதிபரா லேடி சூப்பர் ஸ்டாரின் சகோதரர்? தாய்மாமனின் கிளிக்ஸ்!
Author: Udayachandran RadhaKrishnan30 August 2025, 7:00 pm
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாராஇ, பான் இந்தியா அளவில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார். கடைசியாக டெஸ்ட் என்ற படம் ஓடிடியில் வெளியானழ.
தற்போது நயன்தாரா கைவசம் ஏராளமான படத்தில் நடித்து வருகிறார். இவர் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்தார். வாடகைத் தாய் மூலம் இவர்களுக்கு இரட்டை மகன்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நயன்தாராவுக்கு உடன் பிறந்த அண்ணன் ஒருவா உள்ளார். கேரளாவை பூர்விகமாக கொண்ட நயன்தாராவுக்கு லெனோ குரியன் என்ற சகோதர் உள்ளார்.

இவர் துபாயில் உள்ளதாவும், தற்போது தனது தங்கையான நயன்தாரா வீட்டிற்கு அவர் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. வீட்டில் விசேஷம் என்பது போல செய்திகள் உலா வருகிறது. தங்கை மகன்களுக்கு தாய் மாமன் என்பதால் வீட்டில் விசேஷம் என்றும் சொல்லப்படுகிறது. அண்ணனுடன் நய்னதாரா எடுத்த போட்டோ தற்போது வைரலாகி வருகிறது.
