காதலிக்க மறுத்தது குத்தமா…? எய்ட்ஸ் வதந்தி பரப்பி நடிகர் மோகனின் வாழ்க்கையை நாசமாகிய நடிகை இவர் தான்!

Author: Shree
29 May 2023, 8:11 pm

80களில் பிரபலமான ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் மோகன். இவர் கன்னட, மலையாள, தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் திரைப்படங்களினால் மிகவும் பிரபலமானவராக அறியப்பட்டார்.
தமிழில் எண்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர் கமலஹாசன் முதன்மை வேடத்தில் நடித்திருந்த கோகிலா என்றத் திரைப்படத்தில் அறிமுகமானதால் கோகிலா மோகன் என அழைக்கப்பட்டார்.

Mohan at IIFA UTSAVAM Chennai Press Meet

பயணங்கள் முடிவதில்லை, கோபுரங்கள் சாய்வதில்லை,இளமை காலங்கள், அன்பே ஓடி வா, இதய கோவில், உதயகீதம், பிள்ளைநிலா, மௌன ராகம், மெல்லத் திறந்தது கதவு உள்ளிட்ட பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி ஸ்டார் ஹீரோவாக நல்ல அந்தஸ்தை பிடித்தார். இவர் தமிழில் 80க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகர் மோகனுக்கு பெண் ரசிகைகள் ஏராளம் பேர் இருந்தார்கள். திரைத்துறையை சேர்ந்த அவருடன் நடித்த நடிகைளே அவரை ஒருதலையாக காதலித்தார்கள். ஆம், 80ஸ் காலத்தில் அவருடன் நடித்த நடிகைகளில் ஒருவர், ” நான் உங்களை காதலிக்கிறேன் என்னை திருமணம் செய்துக்கொள்ளுங்கள் ” என அவர் பின்னாடியே அலைந்து தொந்தரவு செய்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் வெறுப்புக்கு ஆளான மோகன் எனக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை. எனது சினிமா வாழ்க்கை நன்றாக செல்கிறது என்னால் அதைத்தாண்டி வேற எதுவும் இப்போதைக்கு யோசிக்க முடியவில்லை என கூறியுள்ளார்.

இதையடுத்து தன்னை மோகன் ஏற்றுக்கொள்ளவில்லையே என்ற விரக்தியில் அந்த நடிகை, மோகன் பல நடிகைகளுடன் தகாத உறவில் இருந்து வருவதாகவும் அவர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கட்டுள்ளார் எனவே அவருடன் யாரும் நடிக்கவேண்டும் என கூறினாராம். அன்றிலிருந்து மோகனின் வாழ்க்கை அழிந்துவிட்டது. அவர் வீட்டிற்குள்ளேயே முடங்கிவிட்டாராம்.

ஒரு கட்டத்தில் இருக்கிறாரா? இல்லையா? என தெரியாமலே வாழ்ந்து வந்துள்ளார் என பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்திருக்கிறார். அந்த நடிகை பூர்ணிமா தான் என ரசிகர்கள் பலரும் கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள். நடிகர் மோகன் – பூர்ணிமா இருவரும் இணைந்து அந்த சில நாட்கள் என்ற படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த வீடியோ லிங்க்:

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!