பொது வெளியில் அசிங்கப்படுத்திய டான்ஸ் மாஸ்டர்!  கதறி அழுத சிவகார்த்திகேயன் பட நடிகை?

Author: Prasad
9 August 2025, 3:24 pm

பாலிவுட் பைங்கிளி

பாலிவுட்டில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் இஷா கோபிகர். இவர் தமிழில் “காதல் கவிதை”, “என் சுவாசக் காற்றே” போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார். மேலும் சிவகார்த்திகேயனின் “அயலான்” திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

இவர் சினிமாவிற்குள் நுழைந்ததே “W/O V. Vara Prasad” என்ற ஒரு தெலுங்கு திரைப்படத்தின் மூலம்தான். இத்திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட இஷா கோபிகர் அப்பாடலுக்கு நடனம் அமைத்த டான்ஸ் மாஸ்டர் தன்னை அவமானப்படுத்தியதாக ஒரு அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

நீங்கள் எல்லாம் ஏன் டான்ஸ் ஆட வர்ரீங்க?

“தென்னிந்திய சினிமா படப்பிடிப்பில் நடந்த சம்பவம் இது. அது எனது கெரியரின் தொடக்கம். பாலிவுட்டிற்குள் நுழைவதற்கு முன் நடந்தது அது. தென்னிந்திய சினிமா பாடல்களில் நடனமாடுவது அவ்வளவு சுலபம் கிடையாது. 

அந்த நடன இயக்குனர் பலர் முன்னிலையில் என்னை அவமானப்படுத்தினார். இவள் போன்ற பெண்கள் எல்லாம் பாலிவுட்டில் இருந்து வருகிறார்கள். இவர்களுக்கு எதுவும் தெரிவதில்லை. உனக்கு நடனமாட தெரியவில்லை என்றால் ஏன் வருகிறாய்? என கேட்டார். 

எனக்கு அவமானமாக போய்விட்டது. மேக்கப் வேனிற்குள் சென்று அழுதேன். ஆனால் அதனை நான் சவாலாக எடுத்துக்கொண்டேன். அதன் பின் முறையாக நடனம் கற்றுக்கொண்டேன்” என அப்பேட்டியில் இஷா கோபிகர் தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். இப்பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!