தாய்மை வாழ்கென தூய செந்தமிழ் ஆரிராரோ… களைகட்டிய எம்.எஸ் பாஸ்கர் மகளின் வளைகாப்பு விழா!

Author:
27 August 2024, 4:41 pm

தமிழ் சினிமாவில் பிரபல குணச்சித்திர நடிகரும் காமெடி நடிகரும் ஆன எம் எஸ் பாஸ்கர் பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமான காமெடி நடிகராக இருந்து வருகிறார். இவர் கிட்டதட்ட 75 படங்களுக்கு மேல் நடித்திருப்பார். திரைப்பட நடிகர் என்பதை தாண்டி பின்னணி குரல் கொடுப்பவர் ஆகவும் இருந்து வருகிறார்.

முதன் முதலில் விசு இயக்கத்தில் வெளிவந்த திருமதி ஒரு வெகுமதி என்ற திரைப்படத்தின் மூலம் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆனார். இவருக்கு ஒரு மகன் ஒரு மகள் இருக்கிறார்கள்.

இவரது மகன் தான் 96 திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் இளம் வயது ராம் கேரக்டரில் நடித்தவர். இவரது மகள் ஐஸ்வர்யா தமிழ் திரைப்படங்களில் ஹீரோயின்களுக்கு குரல் கொடுத்து டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆக இருந்து வருகிறார்.

மகள் ஐஸ்வர்யா பாஸ்கருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு அக்குள் சுதாகர் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. பிரம்மாண்டமாக நடைபெற்ற திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தியிருந்தனர். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ஐஸ்வர்யாவுக்கு வளைகாப்பு விழா மிகவும் பிரம்மாண்டமாக கலகலப்பாக நடைபெற்றிருக்கிறது.

அதன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்கள் வெளியாகி வைரலாக அவருக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். கர்ப்பிணியாக எடுத்துக் கொண்ட இந்த க்யூட்டான போட்டோக்கள் தற்போது வைரல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?