ரிலீசாகி 10 நாள் கூட ஆகல… அதுக்குள்ள சன் டிவில போடப் போறாங்க : சோதனை மேல் சோதனை!

Author: Udayachandran RadhaKrishnan
20 January 2023, 12:24 pm

குடும்ப ரசிகர்களால் திரையரங்கில் கொண்டாடப்பட்டு வரும் திரைப்படம் வாரிசு.

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்த இப்படம் முதல் இரண்டு நாட்களில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், அதன்பின் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

வசூல் ரீதியாகவும் சக்கபோடு போட்டு வருகிறது. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ஜெயசுதா, சரத்குமார், ராஷ்மிகா, யோகி பாபு, ஷாம், ஸ்ரீகாந்த், சங்கீதா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

கடந்த 11ம் தேதி வெளியான இப்படம் அடுத்த மாதம் ஓடிடியில் வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அதற்குள் சன் டிவியில் வாரிசு திரைப்படம் எப்போது ஒளிபரப்பாகும் என்பது குறித்து தகவல் வெளியாகிவிட்டது.

அதன்படி, வருகிற ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டிற்கு வாரிசு திரைப்படம் சன் டிவியில் ஒளிபரப்பாகும் என தகவல் தெரிவிக்கின்றனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!