தல அஜித்குமார் சந்தித்த அதே பிரச்சனையை சந்தித்த ஜாக்கிசான் !

29 September 2020, 3:23 pm
Quick Share

தல அஜித் என்றால் ஒரு பெரிய மாஸ் ஃபேன் Base உள்ளது என்பது உலகறிந்த விஷயம். சமீபத்தில் வெளிவரும் அஜித்தின் படங்கள் வசூலில் சாதனைகள் படைத்து வருகிறது.

இவருக்கு எப்படி பொதுமக்கள் ரசிகர்களாக இருப்பதுபோல கடவுள் அருளில் சில முக்கிய திரைப்பிரபலங்கள் பலரும் இவருக்கு ரசிகர்களாக இருக்கின்றனர். இந்தநிலையில், Hollywood Action Hero ஜாக்கி சானுக்கு 66 வயதாகும் நிலையில் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது அவர் வெளியிட்டு இருக்கும் ஒரு அறிக்கையில் சில மர்ம நபர்கள் தன்னுடைய நிறுவனத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி வருவதாக தனது ரசிகர்கள் உட்பட அனைவருக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதே பிரச்சனையை நடிகர் அஜித் குமாரும் சமீபகாலத்தில், சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம் தான் அவர் இது பற்றி தனது வழக்கறிஞர் மூலமாக எச்சரிக்கை விடுத்து லீகல் நோட்டீஸ் ஒன்றினையும் வெளியிட்டு இருந்தார். தன் பெயரை சிலர் தவறாகப் பயன்படுத்தி வருகிறார்கள் என்று அதில் அவர் குறிப்பிட்டிருந்த அவர் “சுரேஷ் சந்திரா மட்டுமே தன்னுடைய அனுமதி பெற்ற பிரதிநிதி என்றும் அவர் மட்டுமே தன்னுடைய சமூக மற்றும் தொழில் ரீதியான நிர்வாகி” என்று அறிக்கை வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது.