உங்க சேனல் பார்த்து தேவையில்லாத நிறைய தெரிஞ்சிக்கலாம்; பயில்வான் ரங்கநாதனை கலாய்த்த பிரபலம்

Author: Sudha
23 July 2024, 10:59 am

நடிகர் நகுல் ஹீரோவாக நடிக்கும் வாஸ்கோடகாமா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் பேசிய அயன், கவண் போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ் பெற்ற ஜெகன் நடிகர் நகுல் அதிகமாகப் புத்தகம் படிப்பது கிடையாது. ஆனாலும் அவர் மிகவும் புத்திசாலி. இதை நான் ஒரு யூடியூப் சேனல் பார்த்து தெரிந்து கொண்டேன் என சொன்னார்.

அவருக்கு கை கொடுத்த பயில்வான் ரங்கநாதனிடம் நீங்களும் யூடியூப் சேனல் பார்க்கரீங்க போல இருக்கு.உங்களுடைய சேனல் பார்த்தா வேண்டாதது எது இருக்கோ அதையெல்லாம் தெரிஞ்சுக்கலாம் நல்லது எதுவும் தெரிஞ்சுக்க முடியாது என்று விமர்சனம் செய்தார்.

இதற்கு பதில் அளித்த பயில்வான் ரங்கநாதன் விமர்சனம் செய்பவர்களை திட்டாதீர்கள்.இது ஒரு எச்சரிக்கை. இந்தியன் 2 நல்லா இல்ல அப்படின்னா அது நல்லா இல்லனு தான் அதற்காக நல்லா இருக்கு அப்படின்னு சொல்ல முடியுமா?படம் நல்லா இருந்தா நல்லா இருக்குன்னு சொல்ல போறோம் நல்ல விமர்சனம் என்பது பட்டை தீட்டும் வைரம் போன்றது மேலும் மேலும் நம்மை மெருகேற்றிக் கொள்ள அது உதவுகிறது அதனால் விமர்சனம் செய்பவர்களை திட்டாதீர்கள் என்றார்.

கமெண்ட் போடாதீங்க அப்படின்னு சொல்லாதீங்க ஜெகன். கமெண்ட் போடட்டும் அப்பதான் நம்மளை பத்தி நாம தெரிஞ்சுக்க முடியும் என்று பேசினார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!