விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அதிரடி முடிவெடுத்த ஜனநாயகன் படக்குழு? இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! 

Author: Prasad
12 June 2025, 1:10 pm

விஜய்யின் கடைசித் திரைப்படம்

தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய விஜய் தற்போது முழுநேர அரசியல்வாதியாக மாறி வருகிறார். சமீப மாதங்களாக அரசியல் ரீதியாக அவரின் செயல்பாடுகள் தீவிரமடைந்து வருகின்றன. இந்த நிலையில் அவரது கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தை குறித்துதான் ரசிகர்கள் பலரும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர். 

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வந்தாலும் விஜய் இடம்பெறும் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுவிட்டன. இத்திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவரவுள்ளது. 

jana nayagan glimpse video on vijay birthday

ஹெச்.வினோத் இயக்கி வரும் இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் மமிதா பைஜு, பாபி தியோல், பிரகாஷ் ராஜ், நரேன் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். 

விஜய் பிறந்தநாளில் இன்ப அதிர்ச்சி?

எப்போதும் விஜய் பிறந்தநாள் தினத்தில் அவர் நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரோ அல்லது டீசரோ வெளிவருவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அவரது பிறந்தநாள் தினத்தில் “ஜனநாயகன்” திரைப்படத்தை குறித்த எந்த அப்டேட்டும் வெளிவராது என கூறப்பட்டது. 

அதாவது விஜய் தற்போது தீவிர அரசியலில் ஈடுபட்டு வருவதால் அவரது தொண்டர்களை திசைதிருப்புவது போல் எந்த விஷயமும் அமைந்துவிடக்கூடாது என்பதால் விஜய் தனது பிறந்தநாளில் எந்த அப்டேட்டும் வெளிவரக்கூடாது என படக்குழுவினரிடம் கண்டிஷன் போட்டதாக தகவல்கள் வெளிவந்தன. 

jana nayagan glimpse video on vijay birthday

ஆனால் தற்போது ஒரு புதிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அதாவது வருகிற ஜூன் 22 ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு “ஜனநாயகன்” திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்று வெளிவரவுள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என கூறப்படுகிறது. 

  • vijayakanth artificial intelligence cameo role is poor said by famous critic விஜயகாந்தை கேவலப்படுத்திட்டாங்க? இதை AI னு சொன்னா AI-ஏ நம்பாது? படை தலைவன் பார்த்து கடுப்பான பிரபலம்…
  • Leave a Reply