ஜனநாயகன் படத்துக்கு இப்படி ஒரு பரிதாபரமான நிலையா? ரசிகர்களை ஷாக்கில் ஆழ்த்தும் செய்தி…

Author: Prasad
26 August 2025, 4:47 pm

விஜய்யின் கடைசி திரைப்படம்

விஜய்யின் கடைசி திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தை ஹெச் வினோத் இயக்கியுள்ளார். அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 

இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் மமிதா பைஜு, பாபி தியோல், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

இப்போதெல்லாம் ஒரு திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகும்போதே அதன் ஓடிடி, சாட்டலைட் ஆகிய உரிமங்களின் வியாபாரம் முடிவடைந்துவிடுகிறது. அந்த வகையில் விஜய்யின் “ஜனநாயகன்” திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை  அமேசான் பிரைம் நிறுவனம் ரூ.121 கோடிக்கு கைப்பற்றியுள்ளது. தமிழ் சினிமாவில் இதுவரை வியாபாரமானதிலேயே மிகப்பெரிய தொகைக்கு ஓடிடி நிறுவனத்தால் கைப்பற்றப்பட்ட திரைப்படம் “ஜனநாயகன்” திரைப்படமே. 

Jana nayagan satellite rights not bagged even now

வியாபாரமாகாத சாட்டிலைட் உரிமம்

எனினும் “ஜனநாயகன்” திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமம் இன்னும் வியாபாரமாகவில்லையாம். இத்திரைப்படத்தை வாங்க சன் டிவி முன்வரவில்லை என கூறப்படுகிறது. சில அரசியல் காரணங்களுக்காக சன் டிவி இத்திரைப்படத்தை வாங்க முன்வரவில்லையாம். 

விஜய் டிவி இத்திரைப்படத்தை வாங்க அதிக வாய்ப்புகள் உள்ளதாம். ஆனால் இது வரை சாட்டிலைட் உரிமம் விற்பனை ஆகவே இல்லையாம். இனி வரும் நாட்களிலாவது இத்திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமம் வியாபாரம் ஆகிவிடுமா என பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். 

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!