கூட்ட நெரிசலில் சிக்கி தவித்த ஸ்ரீதேவி மகள்? Bodyguard ஆக மாறிய ஹீரோ! வைரல் வீடியோ…
Author: Prasad29 August 2025, 7:17 pm
கனவு கன்னி
ஸ்ரீதேவியின் மகளான நடிகை ஜான்வி கபூர், தற்போதைய இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வருகிறார். இவர் நடித்த “பரம் சுந்தரி” திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் ஜான்வி கபூர் மலையாளியாக நடித்துள்ளார். இதில் சித்தார்த் மல்ஹோத்ரா கதாநாயகனாக நடித்துள்ளார். இத்திரைப்படத்தை துஷார் ஜலோடா என்பவர் இயக்கியுள்ளார்.

கூட்ட நெரிசலில் சிக்கிய ஜான்வி கபூர்
இன்று “பரம் சுந்தரி” திரைப்படம் வெளியான நிலையில் மும்பையில் அமைந்துள்ள லால்பக்சா ராஜா விநாயகர் சிலையை ஜான்வி கபூர், சித்தார்த் மல்ஹோத்ரா ஆகியோர் தரிசிக்க சென்றிருந்தார்கள். அப்போது அங்கே கூட்டம் அலை மோதியது. இந்த கூட்ட நெரிசலில் ஜான்வி கபூர் சிக்கிக்கொண்டார். அப்போது நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா அவரை பாதுகாப்பாக அழைத்து சென்றார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
