ஸ்கூல் படிக்கும்போதே காதல் கேட்குதா? மகளை வெளுத்து வாங்கிய ஸ்ரீ தேவி – உண்மை உடைத்த ஜான்வி கபூர்!

Author: Shree
1 September 2023, 2:58 pm

மறைந்த நடிகையும் பாலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டாருமான ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் கடந்த 2018 – ஆம் ஆண்டு வெளியான தடாக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். ஜான்வி இப்போதெல்லாம் தன் படங்களில் நடிப்பதில் தான் கவனம் செலுத்தி வருகின்றார்.

குறுகிய காலத்திலேயே ஜான்வி கபூருக்கு பல பட வாய்ப்புகள் வருவதற்கு காரணம் அவரின் குடும்ப பின்னணி தான் முக்கியமான ஒன்றாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு படத்தில் சரியாக நடிக்க தெரியாது என்று பல விமர்சனங்களும் தொடர்ந்து எழுந்து வருகிறது.வழக்கம் போலவே ஸ்டார் கிட்ஸ்கள் நடிக்க தெரியாத, திறமை இல்லாமல் திரைத்துறையில் நுழைந்துவிடுகிறார்கள் என விமர்சிக்கப்படுபவர்களில் நைட்க்கை ஜான்வி கபூரும் ஒருவர்.

இருந்தாலும் அதையெல்லாம் தாண்டி தொடர்ந்து படுகவர்ச்சியாக ஆடைகளை அணிந்து கிளாமராக பொதுவெளியில் சுற்றித்திரிந்து வரும் அவர் தற்போது தனது முதல் காதல் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதாவது, நான் பள்ளியில் படிக்கும் போதே முதல் காதல் ஏற்பட்டது. அப்போது இருவருக்கும் நலன் புரிதல் இல்லை. இருவருமே நிறைய பொய் சொல்லுவோம். பொய்யோடும் ஏமாற்றத்தோடும் இருந்த அந்த காதல் நேர்மையானதாக இல்லை.

அதுமட்டும் இல்லாமல் என்னுடைய பெற்றோர்கள் அந்த சமயத்தில் படிப்பில் மட்டும் கவனம் செலுத்த சொன்னார்கள். கடுமையாக திட்டி எச்சரித்தார்கள். அப்போ தான் உன் எதிர்காலம் நன்றாக இருக்கும் என அட்வைஸ் செய்தனர். எனவே நான் என் எதிர்க்கலாம் சிறப்பாக இருக்கவேண்டும் என்பதால் காதலை முறித்துக்கொண்டேன் என கூறினார் ஜான்வி கபூர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!