ரஜினியை ரிஜெக்ட் செய்த ஜெயலலிதா.. தாறுமாறு ஹிட் அடித்த படம்.. எது தெரியுமா?..

Author: Vignesh
14 August 2024, 3:17 pm

நடிகை ஜெயலலிதா அரசியலுக்கு வருவதற்கு முன்பு சினிமாவில் நடித்துக்கொண்டிருந்தபோதே மிகவும் தைரியமான பெண்மணியாகவே இருந்து இருக்கிறார். பொதுவாக ரஜினிகாந்துக்கும் ஜெயலலிதாவுக்கும் பிரச்சினை இருந்ததாக ஒரு தகவல் எப்போதுமே கோலிவுட்டில் முணுமுணுக்கப்பட்டு தான் வந்தது. அதாவது, ரஜினியின் ‘பில்லா’ படத்தில் ஸ்ரீப்ரியா, பிரவீணா, தேங்காய் சீனிவாசன், ஆர்.எஸ்.மனோகர், மனோரமா, கே.பாலாஜி, ஏவி.எம்.ராஜன் முதலானோர் நடித்தார்கள்.

முன்னதாக, இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஜெயலலிதாவை நடிக்க வைக்க அழைத்தார் தயாரிப்பாளர் கே பாலாஜி. கதையை கேட்டுவிட்டு முதலில் சமாதித்த அவர் சில நாட்கள் கழித்து வேண்டாம் சார்.. நான் இதுல நடிக்கிறதா இல்ல வேணும்னா ஸ்ரீபிரியாவை இந்த கேரக்டருக்கு போட்டுக்கோங்க சார் என்று மறுத்துவிட்டாராம்.

billa

இதனிடையே, “எனக்கு பணம் முக்கியம் என்று நினைத்திருந்தாலோ, அப்போது பெரிய நடிகராக வளர்ந்துவிட்ட ரஜினியுடன் நடிக்கலாமே என்று நான் ஆசைப்பட்டிருந்தாலோ நடித்திருப்பேனே.. ஆனால், எனக்கு நடிக்க விருப்பமில்லை மறுத்துவிட்டேன்” என்று ஜெயலலிதா பல வருடங்கள் கழித்து மனம் திறந்து ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதில், விஷயம் என்னவென்றால் ரஜினியுடன் ஜெயலலிதா ஜோடியாக பில்லா படத்தில் நடித்திருந்தால், அந்த படம் இன்னொரு வரலாற்றுப் பதிவாகி இருக்கும் பி லெனின் இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் சரத்பாவுடன் ஜெயலலிதா நடித்த நதியை தேடி வந்த கடல் திரைப்படம் நினைவு இருக்கிறதா? இந்த படம் 1980 ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி பொங்கலுக்கு வெளியானது.

Jayalalitha

இதுதான் ஜெயலலிதா நடித்த கடைசி படம். ஒருவேளை ஜெயலலிதா ரஜினியுடன் நடிக்க சம்மதித்து நடிக்கவும் செய்திருந்தால் 1980-ம் ஆண்டு பொங்கலுக்குப் பிறகு அதே வருடத்தில் அதே மாதத்தில் ஜனவரி 26 ஆம் தேதி வெளியான பில்லா படம் ஜெயலலிதாவின் கடைசி படமாக இருந்திருக்கும். ஏனோ, தெரியவில்லை ரஜினியும் ஜெயலலிதாவும் இணைந்து நடிப்பது நடக்காமலே போய்விட்டது.

மேலும், ஜெயலலிதா அரசியலுக்கு வந்ததால் மீண்டும் சினிமாவில் நடிக்க மறுத்ததாகவும், மற்றப்படி ஜெயலலிதாவுக்கும் ரஜினிகாந்துக்கும் பிரச்சனை என்பது உண்மையில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும், இந்த விஷயத்தை ஜெயலலிதாவே ஒரு கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். அதில், சினிமாவில் தான் மீண்டும் கம்பேக் கொடுக்க திணறுவதாக வெளியான பத்திரிக்கை செய்திகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இப்படியான கடிதத்தை எழுதியிருக்கிறாராம்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!