மீண்டும் சமரச பேச்சு…ரவி மோகன்-ஆர்த்தி வழக்கில் நடந்த திடீர் திருப்பம்..!

Author: Selvan
18 January 2025, 6:01 pm

காணொளி மூலம் ஆஜரான ரவி மற்றும் ஆர்த்தி

தமிழ் சினிமாவில் பிரபல ஹீரோவாக வலம் வந்த ஜெயம் ரவி சமீபத்தில் தன்னுடைய பெயரை ரவி மோகன் அல்லது ரவி என அழைக்குமாறு அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

இவர் தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து பெறுவதாக கடந்த வருடம் தெரிவித்திருந்தார்.இவர்களுடைய வழக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது.மேலும் 2009ஆம் ஆண்டு பதிவு செய்த எங்களுடைய திருமண பதிவை ரத்து செய்ய வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

Ravi Mohan legal case February hearing

இருவரும் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு நீதிமன்றம் உத்தரவு படி ஏற்கனவே மூன்று முறை சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.இந்த நிலையில் நீதிபதி தேன்மொழி முன் மீண்டும் இன்று விசாரணை தொடங்கியது.

அப்போது இருவரும் காணொளி மூலம் ஆஜராகினர்.இருவருக்கும் இடையேயான சமரச பேச்சுவார்த்தைக்காக மத்தியஸ்தர் இன்று வந்திருப்பதாக அவர்களின் வழக்கறிஞர்கள் நீதிபதியிடம் தெரிவித்தனர்.

இதையும் படியுங்க: 44 வயதில் வனிதா விஜயகுமார் இப்படி ஒரு செயலா…படத்தின் டீசரை பார்த்து ரசிகர்கள் ஷாக்..!

பின்பு இருவருடைய சமரச பேச்சுவார்த்தை முடிந்த பிறகு வழக்கு விசாரணையை பெப்ரவரி 15ஆம் தேதி தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளார்.இதனால் இருவரும் பிரிவதில் உறுதியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

  • After listening to the story, Simbu spat out கதையை கேட்டதும் காரித் துப்பிய சிம்பு… சங்கடத்தில் இயக்குநர்!!