“எல்லாம் நடிப்பா கோபால்”? ஆஜரான ஜெயம் ரவி… எஸ்கேப் ஆன மனைவி – நீதிமன்றம் அதிரடி முடிவு!

Author:
15 November 2024, 3:30 pm

நடிகர் ஜெயம் ரவி:

நடிகர் ஜெயம் ரவி சில நாட்களுக்கு முன்னால் தான் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யப்போவதாக தனது சமூக வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார். அதை அடுத்து மனைவி விவாகரத்தில் எனக்கு விருப்பமில்லை எனக் கூறியிருந்தார்.

jeyam ravi

இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவியின் இந்த விவாகரத்து வழக்கு இன்று குடும்ப நல நீதிமன்றத்தில் தேன்மொழியும் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் ஜெயம் ரவி நேரில் ஆஜராகி இருந்தார். ஆனால், அவரது மனைவி காணொளி காட்சி மூலமாக ஆஜர் ஆகி இருந்தார்.

ஆர்த்தி நேரில் வராததால் இதுவே பெரிய கேள்வியாக இருந்துள்ளது. மனைவி ஆர்த்தி முன்னதாக…நான் ஜெயம் ரவியுடன் வாழ ஆசைப்படுகிறேன். அவர் என்னிடம் விவாகரத்து குறித்து எதுவுமே கலந்து ஆலோசிக்காமல் திடீரென விவாகரத்து அறிவித்துவிட்டார்.

விவகாரத்தை ஒப்புக்கொள்ளாத மனைவி:

jeyam ravi

நானும் என் குழந்தைகளும் இதனால் தவித்துக் கொண்டிருக்கிறோம் என ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி முன்னதாக தெரிவித்திருந்தார். அப்படி அவருக்கு உண்மையிலேயே ஜெயம் ரவியுடன் வாழ ஆசை இருந்தால் அவர் இந்த விஷயத்தில் இந்த நேரத்தில் நேரடியாக நீதிமன்றத்திற்கு வந்து அவரைப் பார்த்தாவது பேச வேண்டும் என்ற ஒரு எண்ணத்தில் ஆவது நிச்சயம் வந்திருப்பார் .

எனவே இந்த விஷயத்தில் ஆர்த்தி பேசுவது வெறும் பொய்யா? நடிப்பா? என்று பலரது மனதிலும் கேள்வி எழுந்து இருக்கிறது. காணொளி காட்சியின் மூலமாக ஆஜர் ஆகியிருந்த ஆர்த்தி மற்றும் நேரில் வந்திருந்த ஜெயம் ரவி இருதரப்பு இடையேயும் நீதிபதி வாதத்தை கேட்டார் .

நேரில் ஆஜராக ஆர்த்தி:

jeyam ravi

இவர்கள் இருவருக்கும் இடையேயான பிரச்சனை தொடர்பாக குடும்ப நல நீதிமன்றம் சமரசத் தீர்வு மையத்தின் மூலம் இன்றைய தினமே சந்தித்து பேச வேண்டும் என இருவருக்கும் நீதிபதி உத்தரவிட்டார். அவர்கள் அங்கு சென்று பேசிய பிறகு அங்கு எடுக்கப்படும் முடிவு தொடர்பாக விவரங்களை இன்றைய தினமே தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி தேன்மொழி உத்தரவிட்டிருக்கிறார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!