அந்த நபர் அப்படி பண்ணது… அதிர்ச்சியாகிட்டேன்- ஜொனிடா காந்திக்கு நடந்த பாலியல் சீண்டல்? அடக்கொடுமையே

Author: Prasad
17 June 2025, 11:55 am

மனம் கவர்ந்த பாடகி

பாலிவுட்டில் “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் மூலம் சினிமாவிற்குள் பின்னணி பாடகியாக அடியெடுத்து வைத்தவர்தான் ஜொனிடா காந்தி. அதனை தொடர்ந்து பாலிவுட்டில் பல திரைப்பட பாடல்களை பாடிய அவர், தமிழில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் “ஓகே கண்மணி” திரைப்படத்தில் இடம்பெற்ற “மெண்டல் மனதில்” என்ற பாடலின் மூலம் கோலிவுட்டில் பின்னணி பாடகியாக அறிமுகமானார். 

jonita gandhi shared about harrassment occured to her

அதனை தொடர்ந்து அனிருத் இசையில் “டாக்டர்” படத்தில் இடம்பெற்ற “செல்லம்மா” பாடலை பாடிய பிறகு தமிழ் இசை உலகில் மிகப் பிரபலமாக ஆனார். அதனை தொடர்ந்து “பீஸ்ட்” திரைப்படத்தில் “அரபிக் குத்து”, “டான்” படத்தில் “பிரைவேட் பார்ட்டி”, “வாரிசு” படத்தில் “ஜிமிக்கு பொண்ணு”  என இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் பட்டித் தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. 

பாலியல் சீண்டல்

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட ஜொனிடா காந்தி, தனக்கு நடந்த பாலியல் சீண்டல் குறித்து ஒரு அதிர்ச்சி தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார். அதாவது ஒரு நாள் இன்ஸ்டாகிராமில் தனது நண்பர்களின் பதிவுகளை ஸ்குரோல் செய்து பார்த்துக்கொண்டிருந்தபோது ஒரு ஆண் தனது அந்தரங்க பகுதியின் பின்னணியில் ஜொனிட்டாவின் புகைப்படத்தை வைத்திருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருந்தாராம். இதனை பார்த்து ஜொனிடா காந்தி அதிர்ச்சியடைந்துள்ளார். 

“இது மாதிரியான சம்பவங்களை நான் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை என்பதால் யார் மீதும் வழக்கு போடவில்லை. ஆனால் இதுவும் ஒரு பாலியல் சீண்டல்தான். இது போல பலரும் எனக்கு தொல்லைக் கொடுத்துள்ளனர்” என்று ஜொனிடா காந்தி அப்பேட்டியில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!