சேகர் கம்முலா பண்ண பெரிய தப்பு; நம்மளை இப்படியா கதறவிடுறது?- பேட்டியில் வாய்விட்டு மாட்டிக்கொண்ட பிரபலம்!

Author: Prasad
23 June 2025, 1:02 pm

கலவையான விமர்சனம்

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் கடந்த ஜூன் 20 ஆம் தேதி வெளியான “குபேரா” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. இத்திரைப்படத்தில் தனுஷ் பிச்சைக்காரரின் வேடத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்தின் ட்ரெயிலரும் அட்டகாசமாக வெளிவந்திருந்தது. இதன் காரணங்களால் இத்திரைப்படத்திற்கு அதிகளவு எதிர்பார்ப்பு இருந்தது. 

journalist anthanan criticized kuberaa movie director sekar kammula

ஆனால் இத்திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. தனுஷின் அட்டகாசமான நடிப்பை பலரும் பாராட்டினார்கள். ஆனால் படத்தின் இரண்டாம் பாதியில் திரைக்கதை சுவாரஸ்யமாக இல்லை என ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். மேலும் இத்திரைப்படம் 3 மணி நேரம் ஓடக்கூடிய திரைப்படம் என்பதால் ரசிகர்களின் பொறுமையையும் சோதித்தது. 

அந்த வகையில் இத்திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் சுமாரான வரவேற்பையே பெற்றிருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட மூத்த பத்திரிக்கையாளர் அந்தணன், இயக்குனர் சேகர் கம்முலாவை மிகவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இப்படியா கதறவிடுறது? 

“தனுஷ் மாதிரி ஒரு கமெர்சியல் ஹீரோவை இன்டர்வெல் வரைக்கும் பிச்சை எடுக்க விடுகிறார்கள். அதன் பின் அவரது வங்கி கணக்கிற்கு பத்தாயிரம் ரூபாய் வந்துவிடுகிறது. மேலும் படித்த பெண்ணான ராஷ்மிகா தனுஷுடன் சேர்ந்துவிடுகிறார். 

journalist anthanan criticized kuberaa movie director sekar kammula

அதன் பின் இந்த கதை சினிமாட்டிக்காக செல்லவேண்டும். சினிமாட்டிக்காக இல்லாமல் யதார்த்தமாக கதையை சொல்வதாக நினைத்துக்கொண்டு கடைசி வரை அவர்களை கதறவிடுகிறார் இயக்குனர். நம்மையும் சேர்த்து கதறவிடுகிறார். இயக்குனர் செய்த மிகப்பெரிய தவறு இதுதான். ஏதோ காவியம் எடுப்பதாக நினைத்துக்கொண்டு இப்படி படம் எடுத்து வைத்துவிட்டார்” என அப்பேட்டியில் அந்தணன் இயக்குனர் சேகர்  கம்முலாவை கடுமையாக விமர்சித்துள்ளார் இவரது பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

  • producers not accept to produce ajith kumar 64th movie அஜித்குமாரின் கண்டிஷனை கேட்டு தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்? அப்படி என்னதான் சொல்றாரு!
  • Leave a Reply