மாதம்பட்டியார் மீது டைரக்ட் அட்டாக்! கவனம் பெறாத ஜாய் கிரிஸில்டாவின் மற்றுமொரு இன்ஸ்டா ஸ்டோரி?
Author: Prasad6 September 2025, 1:11 pm
மாதம்பட்டியார் மீது புகார்
பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது சமூக வலைத்தளத்தில் பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜை திருமணம் செய்துகொண்ட புகைப்படங்களை வெளியிட்டார். மேலும் தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் தன்னுடைய குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ்தான் தந்தை எனவும் கூறியிருந்தார்.
மாதம்பட்டி ரங்கராஜ்ஜிற்கு ஏற்கனவே ஸ்ருதி என்ற ஒரு பெண்ணுடன் திருமணம் ஆகிவிட்டது. இத்தம்பதிக்கு இரண்டு குழந்தைகளும் உண்டு. அந்த வகையில் ஸ்ருதியை முறையாக விவாகரத்து செய்யாமல் ஜாய் கிரிஸில்டாவை இரண்டாவது திருமணம் செய்துள்ளதாக மாதம்பட்டி ரங்கராஜ் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதனை தொடர்ந்து ஜாய் கிரிஸில்டா சென்னை காவல் ஆணையரிடம் மாதம்பட்டி ரங்கராஜ் மீது புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் தனது வயிற்றில் வளரும் குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ்தான் தந்தை எனவும் ஆனால் அவர் தன்னுடன் வாழ மறுக்கிறார், இதனை கேட்கப்போனால் தன்னை தாக்குகிறார் எனவும் குறிப்பிட்டிருந்தார். இதனை தொடர்ந்து மாதம்பட்டி ரங்கராஜ் ஜாய் கிரிஸில்டாவை “பொண்டாட்டி” என கொஞ்சுவது போன்ற பழைய வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் ஜாய் கிரிஸில்டா.

சாபம் விட்ட ஜாய் கிரிஸில்டா…
இதனை தொடர்ந்து நேற்று ஜாய் கிரிஸில்டா தனது இன்ஸ்டா ஸ்டோரியில், “பெண்களை ஏமாற்றும் ஆண்களை கடவுள் கண்டிப்பாக தண்டிப்பார், தர்மம் ஜெயிக்கும்” என பதிவிட்டிருந்தார். இந்த இன்ஸ்டா ஸ்டோரி இணையத்தில் வைரல் ஆனது. ஆனால் இந்த பதிவிற்கு முன்பு அவர் இதே போன்று வேறொரு பதிவையும் ஸ்டோரியில் வைத்திருந்தார். அதில், “ஏமாற்றுக்காரர்கள் ‘ஓய் பொண்டாட்டி ‘என்று கூறுவது ஒரே டோனில் தான் கேட்கிறது” என பதிவிட்டுள்ளார்.

மாதம்பட்டி ரங்கராஜ், “பொண்டாட்டி” என்று கொஞ்சுவது போன்ற வீடியோவை ஜாய் கிரிஸில்டா வெளியிட்டிருந்த நிலையில் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் இவ்வாறு ஒரு பதிவை பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
