அன்று பரணியின் காலில் விழுந்தது எதற்கு? உண்மையை உடைத்த ஜுலி !
24 August 2020, 1:01 pmQuick Share
2017-இல் தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமானவர் ஜூலி. தமிழ் பெண், வீர தமிழச்சி என தமிழ் மக்கள் இவரை புகழ்ந்து பேசினர்.
இவர்கள் இப்படி உசுப்பேற்றி விட்டு, பிக் பாஸ் சீசன் 1 -ல் கலந்துகொண்டு 40 நாட்களில் வெளியேறினார்.
ஆனால், அதன் பின்பு வெளியே வந்த போது பரணி காலில் ஜூலி நடு ரோட்டில் விழுந்த காட்சி வைரலாகியது.
இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஜூலி, இதுகுறித்து பேசுகையில் உண்மையில் எனக்கு அவ்வளவு
குற்ற உணர்ச்சியாக இருந்தது, ஏன் என்றால், தெரிந்தோ தெரியாமலோ நான் அவரைப்பற்றி தவறாக பேசிவிட்டேன் ஆனால் என்னை ஒருபோதும் அவர் தவறாக பேசவில்லை. அதனால் குற்ற உணர்ச்சியின் காரணமாக அவரது காலில் விழுந்தேன் என்று தெரிவித்துள்ளார்.