நான் பேய்’அ வந்து சூர்யாவை லவ் பண்ணனும்… ஆசையை வெளிப்படையா சொன்ன ஜோதிகா!

Author: Shree
5 July 2023, 6:53 pm

தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்கள் சூர்யா – ஜோதிகா. இவர்கள் இருவரும் சில ஆண்டுகள் காதலித்து பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு தியா என்ற ஒரு மகளும் தேவ் என்ற ஒரு மகனும் உள்ளனர். திருமணத்திற்கு பின் நடிப்பில் இருந்து விலகிய ஜோதிகா 2015-ம் ஆண்டு வெளியான 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.

இவர்கள் ஒருவரும் காக்க காக்க திரைப்படத்தில் நடித்த பொது காதலித்து வந்தார்கள். அந்த படத்தில் வரும் ரொமான்ஸ் காட்சிகளில் உண்மையாகவே ரொமான்ஸ் செய்து வேற லெவல் கெமிஸ்ட்ரி கொடுத்தனர். 2003ம் ஆண்டு வெளிவந்த இப்படத்தை கௌதம் மேனன் இயக்கியிரும்தார். இந்த திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்தது அப்போவே ரூ. 50 வசூல் ஈட்டி சாதனை படைத்த படமாக பார்க்கப்பட்டது.

WWW.SURYAFANSCLUB.COM

இந்நிலையில் சமீபத்திய பேட்டி இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எதிர்பார்க்கலாமா என கேட்டதற்கு, அப்படி எடுத்தால் நான் பேயாக வந்து தான் சூர்யாவை காதலிக்கனும். ஏனென்றால், அந்த படத்திலே நான் இறந்துவிடுவேன் என கூறினார் ஜோதிகா. மேலும் பேசிய அவர், நாங்கள் இருவருமே காக்க காக்க போன்ற ஒரு ரொமான்டிக் படத்தை தான் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், அப்படி ஒரு ஸ்க்ரிப்ட் கிடைக்கவில்லை என கூறினார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!