ஜோதிகாவின் BEDROOM-ல் பிரபல நடிகரின் போஸ்டர்.. ஆனா அது சூர்யா இல்லப்பா..!

Author: Vignesh
13 July 2024, 10:41 am
jyothika
Quick Share

புஷ் புஷ் நடிகையாக கொழுக் மொழுக் அழகியாக அக்கட தேசத்தில் இருந்து தமிழ் சினிமாவிற்கு நடிக்க வந்தவர் நடிகை ஜோதிகா. இந்தி சினிமாவில் நடித்து தனது கெரியரை ஆரம்பித்த ஜோதிகா வாலி படத்தில் காமியோ ரோலில் நடித்து அறிமுகமானார்.

முதல் படத்திலே நல்ல அறிமுகத்தை பெற்ற அவர் தொடர்ந்து பூவெல்லாம் கேட்டுப்பார், சிநேகிதியே, குஷி, பூவெல்லாம் உன் வாசம், பிரியமான தோழி, தூள், காக்க காக்க, மன்மதன், பேரழகன், சந்திரமுகி, சில்லுனு ஒரு காதல் இப்படி பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். பல எதிர்ப்புகளை மீறி சூர்யாவுடன் 2006 இல் திருமணம் ஜோதிகாவுக்கு நடந்தது. இதற்கு பின்னர், சினிமாவில் இருந்து விலகிய ஜோதிகா இரு குழந்தைகளை பெற்று வளர்த்து வந்தார். அதன் பின் படங்களில் மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார் ஜோதிகா. தமிழ் ,மலையாளம், இந்தி மொழிகளில் கமிட்டாகி ஜோதிகா நடித்து வருகிறார்.

jyothika-updatenews360

முன்னதாக 36 வயதினிலே மூலம் ரீ என்ட்ரி கொடுத்த ஜோதிகா தற்போது, படு பிஸியாக நடித்து வருகிறார். சிறந்த நடிகருக்கான தேசிய விருதை சூர்யாவுக்கு பெற்றுத் தந்த சூராரை போற்று படத்தை தற்போது, இந்தியில் ரீமேக் செய்து வருகிறார். சர்ஃபிரா என பெயர் வைக்கப்பட்ட அந்த படத்தில் சூர்யாவின் கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் நடித்துள்ளார்.

soorarai pottru

இதனை சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து தயாரிக்கிறார்கள். இந்நிலையில், ஜோதிகா தான் அக்ஷய்குமார் உடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு கூறி இருப்பதாவது, வாழ்த்துக்கள் அக்ஷய்குமார் ஒரு ரசிகையாக தன் படுக்கையறையில் உங்களின் போஸ்டரை வைத்திருந்தவள். இன்று உங்களுடன் ஸ்பெஷலான 150 ஆவது படத்தை தயாரிக்கிறாள். இது மறக்க முடியாத அனுபவம் எனக்கு என்று தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

  • Senthil Balajiகிளைமாக்ஸ்க்கு நெருங்குகிறதா செந்தில் பாலாஜி வழக்கு? நாள் குறிச்சாச்சு… நீதிமன்றம் வைத்த ட்விஸ்ட்..!!
  • Views: - 90

    0

    0