என் நெஞ்சில் குடியிருக்கும்… ‘காட்டு உன் நெஞ்சில’.. நடிகர் விஜய்யை மறைமுகமாக தாக்கிய கே.ராஜன்…. கொந்தளிக்கும் ரசிகர்கள்..!!

Author: Vignesh
27 December 2022, 10:02 am

வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் வாரிசு. இந்தப் படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் அஜித்குமாரின் துணிவு படத்துடன் மோதுகிறது. இதனால், அஜித், விஜய் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இதனிடையே, இரு படங்களின் அடுத்தடுத்த அப்டேட்களால் இரு நடிகர்களின் ரசிகர்களும் கொண்டாட்டத்தில் இருந்து வருகின்றனர்.

இதில், ஒருபடி மேலே சென்று வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு நடைபெற்றது. இதில், நடிகர் விஜய் மாஸான என்ட்ரி கொடுத்தார்.

மேலும், அவரது பேச்சுக்கு விழா அரங்கமே அதிர்ந்து போனது. இந்த விழா அரங்கிற்கு உள்ளேயும், வெளியேயும் ரசிகர்களை கட்டுப்படுத்த சில மோதல்களும் ஏற்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் நடிகர் விஜய் வாரிசு இசை வெளியீட்டு விழாவில் செல்பி கேமரா மூலம் ரசிகர்களுடன் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவை என் நெஞ்சில் குடியிருக்கும் என்று ஹேஷ்டேக் உடன் தன்னுடைய Twitter பக்கத்தில் நடிகர் விஜய் பகிர்ந்தார். மேலும் இந்த வீடியோவானது தற்போது சோசியல் மீடியாவில் வைரலானது.

பிரபல தயாரிப்பாளரான கே ராஜன் டாப் நடிகர்களை கூட தைரியமாக விளாசி வருகிறார். திரைப்பட நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் கே ராஜன் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் மனதில் பட்டதை பட்டென பேசி வருகிறார்.

இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள கே ராஜன், நடிகர் விஜயை பகிரங்கமாக விளாசியுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

  • shankar have no other films than indian 3 movie ஷங்கரா? அய்யயோ வேண்டாம்?- பிரம்மாண்ட இயக்குனரை ஓரங்கட்டும் டாப் நடிகர்கள்! அடப்பாவமே