இந்த சமுதாயமே குட்டிச்சுவரா நாசமா போனதுக்கு காரணம் ராதிகா தான்.. வெளிப்படையாக பேசிய பிரபலம்..!

Author: Vignesh
20 May 2024, 6:02 pm

ராதிகா கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். 1970 மற்றும் 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார் ராதிகா. இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சரத்குமார் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். இதுமட்டும் இல்லாமல் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார்.

மேலும் சித்தி என்னும் சீரியல் மூலம் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்த ராதிகா பல ஹிட் தொடர்களை தயாரித்து நடித்துள்ளார். அதன் பின் சன் டிவியில் சித்தி 2 சீரியலில் இருந்து விலகி முழுநேர அரசியல்வாதியாகி விட்டார். தற்போது படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மேலும் படிக்க: உங்களுக்கு வயசு ஆகுமா? ஆகாதா? மேக்கப் இல்லாத DD-யின் போட்டோஷூட்டுக்கு குவியும் கமெண்ட்ஸ்..!

இந்த நிலையில், மூத்த அரசியல் விமர்சகர் டாக்டர் காந்தராஜ் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ராதிகா குறித்து பேசிய அவர் ராதிகாவின் நடிப்பு மிகப் பிரமாதமாக இருக்கும். கிழக்கு சீமையிலே படத்தில் எல்லாம் ராதிகாவின் நடிப்பு அருமையாக இருக்கும். எல்லா கதாபாத்திரங்களுக்கும் அவர் சூட் ஆவார். மீண்டும் ஒரு காதல் கதை என்ற படத்தில் மனநிலையை இழந்த பெண்ணாக நடித்திருப்பார். அந்த படமும் சரி ராதிகாவின் நடிப்பும் சரி நன்றாக இருக்கும்.

sarathkumar-updatenews360

மேலும் படிக்க: புகைப்படத்தில் இருக்கும் டாப் பிரபலம் யாருனு கண்டுபிடிங்க.. இந்த இயக்குனர் பயங்கரமான ஆள் ஆச்சே..!

சீரியல்களுக்கு புது உருவம் கொடுத்ததே ராதிகா தான். அவரின் ‘சித்தி’ என்ற ராதிகாவின் சீரியல்தான், சீரியலையே அறிமுகப்படுத்தியது. இன்று நமது சமுதாயம் குட்டிசுவராகி நாசமாகி போனதற்கு முக்கிய காரணமே ராதிகா தான் என்று சிரித்துக் கொண்டே பேசி உள்ளார். மேலும், பேசியாக அவர் ராதிகாவின் சித்தி சீரியலை பார்த்து அடிக்டாக்கி இன்னமும் அதில் இருந்து வெளியில் வர முடியாமல் மாட்டிக் கொண்டிருக்கிறோம். சீரியல்களுக்கு பெரிய மார்க்கெட் கொடுத்ததே ராதிகா தான் தமிழ் சீரியல் உலகின் தாய் என்று ராதிகாவை கண் மூடிக்கொண்டு சொல்லலாம். வரிசையாக ராதிகா நடித்த நான்கு சீரியல்களுமே சூப்பர் ஹிட் என்று தெரிவித்துள்ளார்.

Gandaraj
  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?