கைதி 2 படத்தை கைவிட்ட லோகேஷ் கனகராஜ்? ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த தகவல்!
Author: Prasad22 August 2025, 5:49 pm
லோகேஷ் கனகராஜ்ஜின் பிளாக்பஸ்டர் திரைப்படம்
“மாநகரம்” திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “கைதி”. இத்திரைப்படத்தில் கார்த்தி நடித்திருந்தார். எஸ் ஆர் பிரபு இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார். இதனையடுத்து லோகேஷ் கனகராஜ் “விக்ரம்” திரைப்படத்தை இயக்கினார். இதில் “கைதி” திரைப்படத்தின் சில அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. அந்த வகையில் “கைதி”, “விக்ரம்” ஆகிய திரைப்படங்கள் Lokesh Kanagaraj Cinematic Universe-க்குள் (LCU) வந்தது.
அதனை தொடர்ந்து உருவான “லியோ” திரைப்படமும் LCUவுக்குள் வந்தது. இந்த நிலையில் இதன் அடுத்த திரைப்படமாக “கைதி 2” திரைப்படம் உருவாகும் என கூறப்பட்டது. லோகேஷ் கனகராஜ் “கூலி” திரைப்படத்தை தொடர்ந்து ரஜினி-கமல் ஆகியோரை இணைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதுமட்டுமல்லாது லோகேஷ் கனகராஜ் அருண் மாதேஸ்வரன் இயக்கும் ஒரு புதிய திரைப்படத்தில் ஹீரோவாகவும் அறிமுகமாகிறாராம்.

கைவிடப்பட்ட கைதி 2?

இந்த நிலையில் “கைதி 2” திரைப்படம் உருவாக வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. அதாவது தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபுவுடன் லோகேஷ் கனகராஜ் “மாநகரம்”, “கைதி” ஆகிய இரண்டு திரைப்படங்களுக்கு மட்டுந்தான் ஒப்பந்தம் போட்டிருந்தாராம். “கைதி 2” திரைப்படத்திற்கு ஒப்பந்தம் போடப்படவில்லையாம். அந்த வகையில் “கைதி 2” திரைப்படம் உருவாக வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. இச்செய்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.
