பிரபல நடிகர்களுடன் கண்கள் சொருகும் அளவுக்கு குடி, மது கோப்பையுடன் காஜல் அகர்வால் !

21 January 2021, 9:11 am
Quick Share

நயன்தாரா, சமந்தாவிற்கு அடுத்து டாப்பில் இருப்பவர் காஜல் அகர்வால். பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான காஜல் அகர்வால், அதன்பின் தெலுங்கில் வெளியான மகதீரா மற்றும் தமிழில் நான் மகான் அல்ல போன்ற படங்களில் வெற்றியால் தமிழகத்தில் வளர்ந்து வரும் நடிகையானார். அதன் பிறகு மோதி விளையாடு, சரோஜா போன்ற படங்களில் நடித்து கவனம் பெறாமல் இருந்தார்.

பின் துப்பாக்கி, மாற்றான், மெர்சல், கோமாளி, விவேகம் என முன்னணி ஹீரோக்களின் நடிகையாக மாறினார். தற்போது அவர் கைவசம் இந்தியன் 2, ஹே சினாமிகா மற்றும் தெலுங்கில் ஒரு படமும் உள்ளது.

சமீபத்தில் காதலரை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த உள்ளார். இந்தநிலையில்
கடந்த 9 ஆண்டுகளுக்கு இவரின் காதலரான கவுதம் கிச்சுலுவுடன் தான் டேட்டிங் சென்றுள்ளார். அங்கு அவருடனும், அல்லு அர்ஜுன், நாக சைதன்யா அவர்களுடன் கண்ணு சொருக்கும் வரை சரக்கடிக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார் காஜல். இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ந்து போய் கிடக்கிறார்கள்.

Views: - 8

0

0