திருமணமான பின்னும், அந்த விஷயத்தை தள்ளி வைத்த காஜல் அகர்வால் – இதுவே காரணம் !

3 November 2020, 10:15 am
Quick Share

ஏற்கனவே சில நாட்களுக்கு முன், First Night செல்வதற்கு முன் மார்க்கமான போஸ் கொடுத்த காஜல் அகர்வாலின் புகைப்படம் செம்ம வைரல் ஆனது.

இவர், பாரதிராஜா அறிமுகப்படுத்திய ப்ராடக்ட். அவர் அறிமுகப்படுத்திய நடிகைகள் யாருமே தோற்றுப் போனதாக சரித்திரம் கிடையாது. காஜல் அகர்வாலை பொம்மலாட்டம் என்னும் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார் பாரதிராஜா.

பொம்மலாட்டம், நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, பாயும் புலி, ஜில்லா உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் காஜல் அகர்வால். தமிழ் தவிர, இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துவருகிறார்.

அடுத்து அவர் நடித்துள்ள, பாரிஸ் பாரிஸ் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார்.

தற்போது துல்கர் சல்மான் அவர்களுடன் டான்ஸ் மாஸ்டர் இயக்கும் ஹே சினாமிகா என்கிற படத்தில் நடித்து வருகிறார். அதன்பிறகு தெலுங்கு சூப்பர் ஸ்டார் ஆன சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா என்னும் படத்தில் நடித்து வருகிறார்.

படப்பிடிப்புக்கு அரசு அனுமதி அளித்ததை அடுத்து ஆச்சாரியா படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் சிரஞ்சீவியுடன் காஜல் அகர்வால் நடிக்க வேண்டிய காட்சிகள் படமாக்கப்பட வேண்டி இருப்பதால் முதலில் அந்த படத்தில் நடித்து முடித்துவிட்டு அதன் பிறகுதான் ஹனிமூன் செல்ல காஜல் அகர்வால் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனால் அகர்வால் தள்ளிவைத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 16

0

0