விபத்தில் சிக்கிய காஜல் அகர்வால்? உடல்நலம் குறித்து அவரே சொன்ன விளக்கம் இதோ…

Author: Prasad
9 September 2025, 12:23 pm

விபத்தில் சிக்கிய காஜல் அகர்வால்

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் டாப் நடிகையாக  ஒரு காலகட்டத்தில் வலம் வந்த காஜல் அகர்வால், 2020 ஆம் ஆண்டு கௌதம் கிட்ச்லு என்பவரை திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதிக்கு நீல் என்ற ஆண் குழந்தையும்  உண்டு. இந்த நிலையில் நடிகை காஜல் அகர்வால் விபத்தில் சிக்கியதாக இணையத்தில் செய்திகள் தீயாக பரவியது. இந்த நிலையில் இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ளார் நடிகை காஜல் அகர்வால். 

விபத்தில் சிக்கினேனா?

“நான் விபத்தில் சிக்கியதாக கூறும் சில அடிப்படையற்ற செய்திகளை கண்டேன். உண்மையில் இச்செய்திகள் முற்றிலும் பொய்யானவை. கடவுளின்  அருளால் நான் முற்றிலும் நலமோடு இருக்கிறேன், பாதுகாப்பாக இருக்கிறேன் என்பதை உங்கள் அனைவருக்கும்  உறுதியளிக்க விரும்புகிறேன். 

Kajal aggarwal faced terrific accident 

இது போன்ற தவறான செய்திகள் நம்பவோ அல்லது பரப்பவோ வேண்டாம் என்று தயவுசெய்து கேட்டுக்கொள்கிறேன்” என தனது எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ளார். இவ்விளக்கம் மூலம் காஜல் அகர்வால் விபத்தில் சிக்கியதாக பரவி வரும் செய்திகளில் உண்மை இல்லை என்பது தற்போது தெரிய வந்துள்ளது. 

தமிழில் கடைசியாக “இந்தியன் 2” படத்தில் நடித்திருந்தார் காஜல் அகர்வால். இதனை தொடர்ந்து “இந்தியன் 3” படத்திலும் நடித்துள்ளார். மேலும் “இராமாயணா” திரைப்படத்தில் மண்டோதரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்  காஜல் அகர்வால். 

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!