“ஒழுக்கம் கெட்ட இந்தி சினிமா” அந்த விஷயத்துல தென்னிந்திய சினிமா தான் பெஸ்ட் – காஜல் அகர்வால்!

Author: Shree
1 April 2023, 8:22 pm

இந்திய சினிமாவின் நட்சத்திர நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். மும்பையில் பிறந்து வளர்ந்த இவர் முதன் முதலாக இந்தி படத்தில் நடித்து தான் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன் பின்னர், தெலுங்கு மொழிகளில் சூப்பர் ஹிட் நடிகையாக வளர்ந்தார். 2008ஆம் ஆண்டு பழனி படத்தில் நடித்து தமிழுக்கு அறிமுகமானார். 2010ல் வெளியான நான் மகான் அல்ல படத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றார்.

தொடர்ந்து சிங்கம், துப்பாக்கி, மாற்றான், துப்பாக்கி, ஆல் இன் ஆல் அழகு ராஜா, ஜில்லா, மெர்சல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது கமல் ஹாசனின் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். அத்துடன் கருங்காப்பியம், உம்மா உள்ளிட்ட படங்கள் தொடர்ந்து வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், “தென்னிந்திய சினிமாவுக்கு நடிக்க வந்தது ஏன்? என்று கேள்வி கேட்டதற்கு, “இந்தி என்னுடைய தாய்மொழி. நான் இந்தி திரைப்படங்களை பார்த்து தான் வளர்ந்தேன். ஆனால், தென்னிந்திய சினிமாவில் இருக்கும் அறம், ஒழுக்கம், மதிப்பு எல்லாம் இந்தி திரை உலகில் குறைவாக தான். அதனால் தான் இந்தியை விட்டுவிட்டு தென்னிந்திய சினிமாவில் அதிகம் கவனம் செலுத்தினேன். இந்தியை காட்டிலும் தமிழ், தெலுங்கு , மலையாளம், கன்னடம் இந்த நான்கு மொழிகளிலும் தனித்துவமான திரைப்படங்கள் வெளியாகிறது என காஜல் பெருமையாக பேசியுள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!