உன் புருஷன் இன்னொருத்தி கூட…. கணவர் குறித்த கிசுகிசுக்கு கஜோல் பதிலடி!

Author:
8 August 2024, 12:52 pm

பாலிவுட் சினிமாவில் பிரபல நட்சத்திர நடிகை ஆன கஜோல் ஹிந்தியில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து அங்கு முன்னணி நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். 1990களில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கும் கஜோல் தமிழில் கூட மின்சார கனவு திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார்.

kajol updatenews360

இந்த திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றி படமாக பார்க்கப்பட்டது. மின்சார கனவு திரைப்படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக கஜோல் நடித்திருந்தார். அந்த திரைப்படத்தின் பாடல்கள் இன்றளவும் ரசிகர்களின் பேவரைட் பாடலாக இருந்து வருகிறது. மீண்டும் தனுஷ் நடிப்பில் வெளிவந்த வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தின் மூலமாக ரீ என்ட்ரி கொடுத்தார். அந்த திரைப்படத்தில் அவர் எதிர் நாயகியாக நடித்திருப்பார்.

இதனிடையே கஜோல் பிரபல பாலிவுட் நடிகரான அஜய் தேவ்கான் என்பவரை 1999இல் திருமணம் செய்து கொண்ட அவருக்கு ஒரு மகன் ஒரு மகள் என இரண்டு பிள்ளைகள் இருக்கும் சமயத்தில் தன்னுடைய கணவர் குறித்து காதல் கிசுகிசு செய்திகள் வெளியாகி இருக்கிறது. அதாவது, நடிகர் அஜய் தேவ்கான் திரைப்படங்களில் நடிக்கும் போது மற்றொரு நடிகைகளுடன் நெருக்கமாக பழகி வருகிறார் என்பது குறித்து செய்திகள் வெளியானதிற்கு நடிகை கஜோல் தற்போது பதில் அளித்திருக்கிறார்.

kajol ajay devgan

நான் எப்போதும் வதந்திகளை நம்பும் பெண்ணே கிடையாது, ஏனென்றால் படப்பிடிப்பு எப்படி இருக்கும் என்பதை நான் நன்கு அறிந்திருக்கிறேன். அடிப்படை புரிதல் இல்லாமல் திருமண வாழ்க்கையை தொடரவே முடியாது அதனால் என்னுடைய கணவர் பற்றி வெளிவரும் வதந்திகள் பற்றி என்றைக்குமே நான் கவலைப்படுவதில்லை என கஜோல் பதிலடி கொடுத்திருக்கிறார். அவரின் இந்த புரிதல் மனதை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!