இந்த விஷயத்துல தலையிடாதீங்க.. உங்கள் வேலையை பார்த்துட்டு போங்க.. கலா மாஸ்டரை திட்டிய மீனா..!

Author: Vignesh
19 September 2023, 10:30 am

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் ஹீரோயினாக புகழ் பெற்றிருப்பவர் நடிகை மீனா. ரஜினி உடன் குழந்தை நட்சத்திரமாக அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்த இவர், பின்னர் வீரா மற்றும் முத்து, எஜமான் போன்ற திரைப்படங்களில் ஜோடியாக நடித்தார்.

தொடர்ந்து கமல், ரஜினி, அஜித் உள்ளிட்ட பலருடன் ஜோடியாக நடித்திருக்கிறார். இவர் சினிமாவில் நடிக்க வந்து சுமார் 40 ஆண்டுகள் ஆனதை அண்மையில் விழாவாக கொண்டாடினர். மீனாவின் கணவர் நுரையீரல் தோற்று நோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார்.

meena

கணவர் மரணத்திற்கு பின்னர் மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்ட் வரவேண்டும் என்ற கனவோடு இரண்டாவது இன்னிங்ஸை துவங்கியிருக்கிறார். மீனாவுக்கு சினிமா துறையில் நிறைய நடிகைகள் தோழிகளாக இருக்கிறார்கள். மீனாவின் கணவர் இறந்தபோது கூட அவர்கள் எல்லோரும் வந்து மீனாவுக்கு ஆறுதல் கூறி அரவணைத்தனர்.

இந்நிலையில், பேட்டி ஒன்றில் பேசியபோது கலா மாஸ்டர் மீனாவும் நானும் நெருங்கிய நண்பர்கள். அவர்களது கணவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்த அந்த மூன்று மாதம் நான் தான். மீனாவுடன் இருந்தேன். மீனாவின் கணவர் இறந்த பிறகு அவளிடம் நான் உனக்கு வாழ்க்கையில், ஒரு துணை வேண்டும் உனக்கு சின்ன வயசு தான் என்று சொன்னால், மீனா என்னை திட்டுவார். உங்கள் வேலையை பார்த்துட்டு போங்க… இந்த விஷயத்தில் தலையிட வேண்டாம் அக்கா… எனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறாள் என கூறுவாள். நானும் அமைதியாகி விடுவேன் என கலா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

meena - updatenews360 3Meena
  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!