Stupid மாதிரி கேட்குறீங்க.. கொந்தளித்த கலா மாஸ்டர்..!

Author: Vignesh
18 November 2023, 10:21 am

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் ஹீரோயினாக புகழ் பெற்றிருப்பவர் நடிகை மீனா. ரஜினி உடன் குழந்தை நட்சத்திரமாக அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்த இவர், பின்னர் வீரா மற்றும் முத்து, எஜமான் போன்ற திரைப்படங்களில் ஜோடியாக நடித்தார்.

தொடர்ந்து கமல், ரஜினி, அஜித் உள்ளிட்ட பலருடன் ஜோடியாக நடித்திருக்கிறார். இவர் சினிமாவில் நடிக்க வந்து சுமார் 40 ஆண்டுகள் ஆனதை அண்மையில் விழாவாக கொண்டாடினர். மீனாவின் கணவர் நுரையீரல் தோற்று நோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார்.

meena

கணவர் மரணத்திற்கு பின்னர் மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்ட் வரவேண்டும் என்ற கனவோடு இரண்டாவது இன்னிங்ஸை துவங்கியிருக்கிறார். மீனா தற்போது தான் கணவர் இறப்பிற்கு பின்னர் பழைய நிலைக்குவர தொடங்கியுள்ளார். அவ்வப்போது மீனாவுக்கு இரண்டாவது திருமணம் என்று செய்தி இணையதளத்தில் வந்து கொண்டே தான் இருக்கிறது.

இது குறித்து, மீனாவின் தோழியான கலாமாஸ்டரிடம் கேட்க ஏங்க அவங்களே இப்போ தான் அந்த விஷயத்தை கொஞ்சம் மறந்து பழைய நிலைக்கு வந்துட்டு இருக்காங்க, இப்ப போய்ட்டு Stupid மாதிரி கேக்குறீங்க, நாங்களே எப்பவாச்சும் இரண்டாவது திருமணம் பத்தி பேசினா மீனா முறைப்பாள் என்று கலா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

  • retro movie first day collection report ஒரே நாளில் தட்டிதூக்கிய ரெட்ரோ! முதல் நாள் கலெக்சனே இவ்வளவு கோடியா? அடேங்கப்பா!