அய்யய்யோ, இவ்வளவு கோடி பட்ஜெட்டா? வெற்றிமாறன்-சிம்பு படத்திற்கு கும்புடு போட்ட கலைப்புலி தாணு?
Author: Prasad29 July 2025, 6:50 pm
வெற்றிமாறன்-சிம்பு கூட்டணி
வெற்றிமாறன்-சூர்யா கூட்டணியில் உருவாவதாக இருந்த “வாடிவாசல்” திரைப்படம் டிராப் ஆனதாக கூறப்பட்ட நிலையில் அடுத்ததாக வெற்றிமாறன் சிம்புவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவித்தார். அத்திரைப்படத்தின் புரொமோ வீடியோவும் படமாக்கப்பட்டு வந்தது. “வாடிவாசல்” திரைப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பதாக இருந்தது. ஆனால் அந்த புராஜெக்ட் கைவிடப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் வெற்றிமாறன்-சிம்பு பிராஜெக்ட்டை தாணு தயாரித்தார்.

வெற்றிமாறன்-சிம்பு கூட்டணியில் உருவாகும் திரைப்படம் “வடசென்னை” திரைப்படத்தின் சில அம்சங்களினால் உருவாவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
வெளியேறிய தாணு?
இந்த நிலையில் தற்போது இத்திரைப்படம் குறித்த ஒரு அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு இத்திரைப்படத்தில் இருந்து வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது.
அதாவது இத்திரைப்படத்தில் சிம்பு லாபத்தில் பங்கு என்ற அடிப்படையில்தான் ஒப்பந்தமானாராம். ஆனால் திடீரென தனக்கு 30 கோடி சம்பளம் வேண்டும் என தாணுவிடம் கேட்டாராம். கணக்கு போட்டு பார்த்ததில் இத்திரைப்படத்தின் பட்ஜெட் நடிகர்களின் சம்பளத்தோடு சேர்த்து ரூ.125 கோடியை தாண்டிவிட்டதாம்.

இந்த பட்ஜெட்டை நம்மால் தாங்க முடியாது என கலைப்புலி எஸ் தாணு இத்திரைப்படத்தில் இருந்து விலகிவிட்டாராம். தற்போது சிம்பு சித்தாரா என்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்திடம் இத்திரைப்படத்தை தயாரிப்பது குறித்த பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறாராம்.
