project k தரமான சம்பவம்….. 600 கோடி பட்ஜெட்டில் அதிர வைக்கும் “கல்கி” டீசர்!

Author: Shree
21 July 2023, 11:47 am

நடிகர் கமல் ஹாசன் தற்போது நாக் அஷ்வின் இயக்கத்தில் புதிய படமொன்றில் வில்லனாக நடித்து வருகிறார். இப்படத்தின் ஹீரோவாக பிரபாஸ் நடித்துள்ளார். மேலும் ஹீரோயினாக தீபிகா படுகோன் நடித்திருக்கிறார். இப்படத்தின் தலைப்பு தற்காலிகமாக project k என டைட்டில் வைத்திருந்தார்கள்.

இப்படத்தில் அமிதாப் பச்சன் முக்கிய ரோலில் நடித்துள்ளார். சுமார் ரூ. 600 கோடி பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்கள். இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் ‘கல்கி 2898 ஏடி’ என பெயரிடப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் டீசரை வெளியிட்டு ரசிகர்களை பிரம்மிக்க வைத்துள்ளது படக்குழு. அறிவியல் புனைகதை படமான ‘கல்கி 2898’ 2898 -ஆண்டில் பூமியில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஜனவரி 12, 2024 அன்று சங்கராந்தி அன்று படம் திரையரங்குகளில் வெளியாகும் என்பது கூடுதல் தகவல். இதோ டீசர் வீடியோ:

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!