அந்த நடிகை தான் வேணும்.. முதல் மனைவியை மருத்துவமனையில் கதறவிட்ட கமலஹாசன்..!

Author: Vignesh
16 March 2024, 3:01 pm

தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திர நடிகரான கமல் ஹாசன் 1978ம் ஆண்டு வாணி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். அதன் பின்னர் வாணி உடனான திருமண உறவை பத்து ஆண்டுக்கு பின் விவாகரத்து செய்து முறித்துக்கொண்டார். அதன் பிறகு 1988ம் ஆண்டு குஜராத்தி நடிகை சரிகாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு பிறந்த குழந்தைகள் தான் ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன். அதன் பின்னர் 2004ம் ஆண்டு கமல் சரிகாவையும் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்.

இதையடுத்து தான் நடிகை கௌதமியுடன் திருமணம் செய்யாமலே லிவிங் முறையில் வாழ்ந்து அவரையும் பிரிந்தார். தெரிந்தே இத்தனை நடிகைகளுடன் பழகி பிரிந்துவிட்ட கமல் ரகசியமாக பல நடிகைகளுடன் உறவு வைத்திருந்ததாக பல்வேறு செய்திகள் வெளியாகியுள்ளது. அதில் சிம்ரன், நடிகை பூஜா குமார், ஆண்ட்ரியா உள்ளிட்ட நடிகைகள் கிசுகிசுக்கப்பட்டார்கள்.

kamal

இந்நிலையில், கமல் ஹாசன் குறித்த ரகசியத்தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது, வாணியுடன் உறவில் இருக்கும்போது நடிகை சரிகாவை கமலஹாசன் காதலித்து வந்துள்ளார். ஒருமுறை வாணி கணபதி வயிற்று வலியால் அவதிப்பட்டு உள்ளார். மருத்துவமனையில், தனது மனைவியை சேர்த்து விட்டு ஆப்ரேஷன் நடக்கும் வரை கூட கமல் அங்கு இருக்கவில்லை. உடனடியாக மருத்துவமனையில் இருந்து கிளம்பி விட்டாராம்.

kamal-updatenews360

அதன் பின்னர், வாணி கணபதிக்கு என்ன நடந்தது என்று கூட கமல் விசாரிக்கவில்லையாம். ஏன் என்றால், அப்போது அவருக்கு சரிகாவுடன் காதல் வந்துவிட்டதாம். அதனால், முதல் மனைவி வாணி கணபதியை கொஞ்சம் கூட கமல் கண்டுகொள்ளவில்லை என பிரபல பத்திரிகையாளர் அந்தணன் கூறியுள்ளார்.

  • Bhuvaneshwari spiritual journey திடீரென ஆன்மிகத்தில் குதித்த கவர்ச்சி நடிகை : இதெல்லாம் ரொம்ப தப்புமா..கவலையில் ரசிகர்கள்..!
  • Views: - 202

    0

    0