ஈகோ வெளியே வந்தது.. ரசிகர்களை கேலி செய்த கமல்ஹாசனை விமர்சித்த சனம் ஷெட்டி..!

Author: Vignesh
25 December 2023, 11:05 am

பிக் பாஸ் சீசன் 7 ல் கடந்த 84 நாட்களை தாண்டி வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால், இதுவரை இந்த சீசனில் யார் டைட்டிலை வெல்வார் என்ற கணிப்பு ரசிகர்களால் யூகிக்க முடியவில்லை.

காரணம் ஒருவரின் ஆட்டமும் ரசிகர்களை கவர்ந்தது போல் இல்லை என்பதுதான். தற்போது, பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் உறவினர்கள் வருகிறார்கள். ஃப்ரீஸ் டாக்ஸ் நடைபெற்றது. போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று பாசத்தை வெளிக்காட்டினர்.

bigg boss

கடந்த சீசன்களை விட இந்த சீசன் வித்தியாசமாகும் டைட்டில் வின்னரை குறித்து 80 நாட்களை கடந்தும் யூகிக்க முடியாமல் இருப்பதாகவும், மக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த சீசனில் போட்டியாளர்களை விட அதிக அளவு விமர்சனங்களும் ட்ரோல்களும் கமலஹாசனுக்கு தான் எழுந்தது.

பொதுவாக ஒவ்வொரு சீசனிலும் சோசியல் மீடியாவில் குவியும் ட்ரோல்களுக்கு கமலஹாசன் பதில் அளித்து வந்த நிலையில், இந்த சீசனில் அவரே டென்ஷன் ஆகும்படி ஏற்பட்ட விஷயங்கள் நடைபெற்றது. அந்த வகையில், பரிதாபங்கள் கோபி மற்றும் சுதாகர் எப்பொழுதும் போட்டியாளர்களை தான் விமர்சித்து கலாய்த்து வந்தனர். இந்த முறை கமலையே, சுடிதார் அணிந்து வந்து பங்கமாய் கலாய்த்திருந்தனர். இது கமலை ரொம்பவே டிஸ்டர்ப் செய்ய அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசி தற்போது சிக்கலில் சிக்கிக் கொண்டார்.

இந்நிலையில், கமலஹாசன் எப்படி ரசிகர்களை விமர்சிக்கலாம் என ஜோ மைக்கேல் தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்துள்ளார். உங்க படம் வரும்போது எல்லாம் உங்களுக்கு சப்போர்ட் பண்ண மக்களை இப்படியா பப்ளிக் ரிவ்யூ என்று சொல்வீர்கள் என்று பதிலடி கொடுத்துள்ளார். மேலும், இதுதான் உங்க ட்ரு கலர் உங்க ஈகோ இந்த சீசன்ல வெளியே வந்துவிட்டது என பேசியுள்ளார்.

மேலும், ஜோ மைக்ல தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 4 போட்டியாளரான சனம் ஷெட்டி ஒவ்வொரு எபிசோடிலும் கமல் சார் கமல் சார் என உருகி உருகி பேசி வந்த சனம் தற்போது, ரசிகர்களை எப்படி mock பண்ணலாம் கமல் சார் இதெல்லாம் சரியே கிடையாது என விளாசி உள்ளார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!