லோகேஷ் கனகராஜ் கொடுத்த வெற்றி? திடீரென உயர்ந்த கமல்ஹாசனின் சொத்து மதிப்பு! எவ்வளவு கோடினு தெரியுமா?
Author: Prasad9 June 2025, 8:46 pm
2021 ஆம் ஆண்டின் சொத்துமதிப்பு
மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியின் தலைவராக செயல்பட்டுவரும் நடிகர் கமல்ஹாசன், 2021 ஆம் ஆண்டு கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் தனித்து போட்டியிட்டார். அந்த தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலின்போது அவர் தனது சொத்து மதிப்பை குறிப்பிட்டிருந்தார். அதாவது ரூ.176 கோடியை தனது சொத்து மதிப்பாக அந்த சமயத்தில் குறிப்பிட்டிருந்தார் அவர்.
திடீரென உயர்ந்த சொத்து மதிப்பு
2025 ஆம் ஆண்டின் மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தல் வருகிற ஜூன் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில் தற்போது திமுகவுடன் இணைந்து பயணித்து வரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடவுள்ளார்.

இதனை தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலில் போட்டியிருவதற்கான வேட்பு மனுவை கமல்ஹாசன் முதல்வர் முக ஸ்டாலின் முன்னிலையில் தாக்கல் செய்தார். அதில் அவரது சொத்து மதிப்பு குறிப்பிடப்பட்டிருந்தது. கடந்த 2021 ஆம் ஆண்டு ரூ.176 கோடியாக இருந்த கமல்ஹாசனின் சொத்துமதிப்பு தற்போது ரூ.305 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த நான்கு ஆண்டுகளில் ரூ.129 கோடி உயர்ந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கமல்ஹாசனின் நடிப்பில் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு வெளியான “விக்ரம்” திரைப்படம் அவருக்கு ரூ.500 கோடி வசூலை அள்ளி கொடுத்தது. அதனை தொடர்ந்து கமல்ஹாசன் தயாரித்த சிவகார்த்திகேயனின் “அமரன்” திரைப்படம் அவருக்கு ரூ.300 கோடி வசூலை அள்ளிக்கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
