ஆஸ்கர் அகாடமியில் உறுப்பினராவதற்கு விண்ணப்பங்கள் தேவையா? கமல்ஹாசனுக்கு வாக்களிக்கும் உரிமை உண்டா?
Author: Prasad27 June 2025, 2:25 pm
ஆஸ்கரிடம் இருந்து வந்த அழைப்பு
ஆஸ்கர் அகாடமியில் உறுப்பினராக உறுப்பினராக சேர்வதற்காக உலகம் முழுவதும் 534 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவைச் சேர்ந்த நடிகர் கமல்ஹாசன், ஆயுஷ்மான் குர்ரானா ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவைச் சேர்ந்த ஒளிப்பதிவாளர் ரணபீர் தாஸ், ஆடை வடிவமைப்பாளர் மாக்சிமா பாசு, காஸ்டிங் இயக்குனர் கரண் மல்லி, தயாரிப்பாளர்கள் ஸ்மிருதி முந்த்ரா, பாயல் கபாடியா ஆகியோருக்கும் ஆழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசன் வாக்களிக்கலாமா?
கமல்ஹாசன், ஆயுஷ்மான் குர்ரானா ஆகியோருக்கு வாக்களிக்கும் உறுப்பினருக்கான அழைப்பே வந்துள்ளது.அகாடமியில் உறுப்பினராக ஆவதற்கு விண்ணப்பங்கள் அவசியம் இல்லை எனவும் அகாடமியில் இரண்டு உறுப்பினர்கள் வேட்பாளர்களை பரிந்துரை செய்ய வேண்டும் எனவும் கூறப்படுகிறது.

இந்த புதிய உறுப்பினர்களில் 55% அமெரிக்காவிற்கு வெளியே உள்ள 60 நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. பரிந்துரைக்கான வாக்களிப்பு 2026 ஆம் ஆண்டு ஜனவரி 12 முதல் 16 வரை நடைபெறும் எனவும் ஜனவரி 22 ஆம் தேதி அதிகாரப்பூர்வ பரிந்துரைகள் அறிவிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. 2026 மார்ச் மாதம் 15 ஆம் தேதி ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.