ஹிந்திக்கு எதிராக பேசி வம்பிழுத்த கமல்- பட புரொமோஷன்லையும் அரசியலை விடமாட்டிக்கிறாரே!
Author: Prasad23 May 2025, 6:38 pm
புரொமோஷனில் தீவிரம்
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தை கமல்ஹாசன், மணிரத்னம், ரெட் ஜெயன்ட் நிறுவனத்தார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
முழுக்க முழுக்க அதிரடியான கேங்கஸ்டர் திரைப்படமாக “தக் லைஃப்” உருவாகியுள்ளது. அதுமட்டுமல்லாது “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 38 வருடங்களுக்கு பின் கமல்ஹாசனும் மணிரத்னமும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் பலரும் வெறித்தனமாக இத்திரைப்படத்திற்காக காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இத்திரைப்படம் வெளியாக இன்னும் 13 நாட்களே மீதமுள்ளதால் இத்திரைப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
ஹிந்தியை ஓரமா வைங்க…
இந்த நிலையில் “தக் லைஃப்” திரைப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், “ஹிந்தியை பிறகு கற்றுக்கொள்ளலாம். முதலில் அனைவரும் பக்கத்து மாநிலங்களில் பேசுகின்ற மொழியை கற்றுக்கொள்ளுங்கள். நமது மொழி அழிந்து போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நமது கடமை. நாம் அனைவருமே திராவிடர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்” என கூறினார். இவரின் பேச்சு இணையத்தில் பேசுப்பொருளாக உருவாகியுள்ளது. “திரைப்பட மேடைகளிலும் அரசியலை விடமாட்டிக்கிறாரே” என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.