கமல் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் படத்தின் டைட்டில் ரிலீஸ் : தாறுமாறு என ரசிகர்கள் கமெண்ட்ஸ்..!

16 September 2020, 6:29 pm
Quick Share

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுதியுடன் நடிப்பில் படு மாஸாக, மிக சிறப்பாக, வெறித்தனமாக உருவாகியுள்ளது “மாஸ்டர்”.

இந்த படத்தின் டீஸர் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது. இது இல்லாமல் வாத்தி கம்மிங் ஒத்து பாடல் ரசிகர்கள் மத்தியில் ஆரவாரமான வரவேற்பை பெற்று வருகின்றது. மாஸ்டர் பற்றிய எந்த Update வந்தாலும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பெரிதளவில் கொண்டாடி வருகிறார்கள்.

தற்போது இன்னும் சில நாட்களில், லோகேஷ் கனகராஜ் வரலாறு காணாத ஒரு சம்பவத்தை செய்ய போகிறார், அது என்ன என்றால் கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினி நடிக்க இருக்கும் படத்தை இயக்க போவது லோகேஷ் கனகராஜ் அவர்கள் தான் என்று எதிர்ப்பார்க்க பட்டது. ஆனால் சம்பவம் தலைகீழா போய் தற்போது அந்த படத்தை அடுத்த படமாக எடுக்கலாம் என்று மூட்ட கட்டி வைத்துவிட்டு தற்போது வேறு ஒரு கதையை கமல்ஹாசனுக்கு சொல்லி ஓகே வாங்கியுள்ளார்.

ஆம் இன்று அது குறித்து அதிகார பூர்வமான தகவல் லோகேஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படத்துக்கு Title எவனென்று நினைத்தாய் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதுல கூடுதலான தகவல் என்னவென்றால் லோகேஷ் கனகராஜ் கமலின் தீவிர ரசிகர். ஆக, ஒரு வேட்டையாடு விளையாடு படம் போல் ஒரு சம்பவத்தை எதிர்நோக்கி காத்திருப்போம்.