உங்கள நல்லா ஏமாத்துறாங்க… ரஜினி கோடி ரூபாய் சம்பளம் வாங்க கமல் தான் காரணம்!

Author: Shree
16 October 2023, 12:32 pm
rajinikanth
Quick Share

தமிழ் சினிமாவில் இரு துருவ நட்சத்திரங்களாக விளங்கி வருபவர்கள் ரஜினி கமல். இருவரும் நடிப்பை தாண்டி சிறந்த நண்பர்களாகவும் இருந்து வருகிறார்கள். ரஜினிகாந்த் ஏதாவது ஒரு முடிவை எடுக்க கமலிடம் சொல்லி தீர்வு கண்டபின் தான் முடிவு எடுப்பாராம். அப்படி ஒரு நம்பிக்கையை கமல்ஹாசனிடம் வைத்திருக்கும் ரஜினிகாந்த் குறித்த ஒரு சுவாரஸ்யமான தகவல் தான் தற்போது கிடைத்துள்ளது.

ரஜினிகாந்த் ஆரம்பத்தில் பல படங்களில் வில்லனாக நடித்துவிட்டு அதன் பின்னர் தான் ஹீரோவானார். அவர் ஹீரோவான பிறகு அவரது திரைப்படங்களுக்கு மிகப்பெரிய அளவில் மவுஸ் கிடைத்தது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பும் கலெக்ஷனும் கிடைத்தது. ஆனாலும், கூட ரஜினி சம்பளத்தை உயர்த்தாமல் லட்சத்தில் சம்பளம் கொடுத்து வந்துள்ளனர்.

இதனை ரஜினி அழைத்து பேசிய கமல் ஹாசன், உங்களது திரைப்படங்களில் மார்க்கெட்டில் எந்த அளவிற்கு மவுஸ் இருக்கிறது தெரியுமா? எவ்வளவு லாபம் கிடைக்கிறது தெரியுமா? ஆனால் ஏன் சம்பளத்தை உயர்த்தாமல் இருக்கீங்க? என கேட்டாராம். அதன் பின்னர் தான் அவர் சுதாரித்து பார்த்துள்ளார்.

பின்னர் கமலுடன் இது குறித்து ஆலோசிக்க நீங்க இனிமேல் கோடியில் சம்பளம் கேட்டு வாங்குங்கள் பல தயாரிப்பாளர்கள் விவரம் தெரியாத உங்களை ஏமாற்றுகிறார்கள் என கமல் கூறினாராம். அதன் பிறகு தான் ரஜினி, அவரது சம்பளத்தை கோடிக்கணக்கில் உயர்த்தினாராம். எனவே ரஜினியின் சம்பள உயர்வுக்கு காரணம் கமல் தான் என பிரபல பத்திரிகையாளர் பேட்டி ஒன்றி கூறியுள்ளார்.

Views: - 347

0

0