இனிமேல் வடிவேலு என்கிட்டவே வரமாட்டார்… அப்பவே சொன்ன கமல் – வாக்கு பலித்துவிட்டதாக புலம்பும் வைகைப்புயல்!

Author: Shree
4 September 2023, 11:20 am

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கமல் ஹாசன் இணைந்து நடித்த திரைப்படம் தேவர் மகன். இப்படம் 1992 ஆம் ஆண்டு தீபாவளி நாளில் வெளிவந்து மாபெரும் ஹிட் அடித்தது. இந்த படம் 1992ல் 5 தேசிய விருதுகளை வென்றது. மேலும் ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது

இப்படத்தில் கௌதமி , ரேவதி , நாசர், வடிவேலு உள்ளிட்ட பல நடித்திருந்தார்கள். இப்படத்தில் மேலாதிக்க சாதியை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் என இன்றும் பல விவாதங்களில் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான முயற்சிகள் கூட மேற்கொள்ளப்படுவதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில் இப்படத்தை குறித்த அனுபவத்தை பேட்டி ஒன்றில் பகிர்ந்துக்கொண்டுள்ளார் நடிகர் வடிவேலு. தேவர் மகன் படத்தில் இசக்கி கேரக்டரில் நடிக்க கமல் ஹாசன் என்னை கூப்பிட்டு வாய்ப்பு கொடுத்தார். அப்படத்தில் என்னுடைய நடிப்பு பார்த்து அவர் பெரிதும் பாராட்டினார். தேவர் மகன் படத்தின் சக்ஸஸ் மீட் நிகழ்ச்சியில் பேசிய கமல் ஹாசன்,

இனிமேல் வடிவேலுவுக்கு நான் தேவைப்பட மாட்டேன், அவரும் என்னை தேடி வரமாட்டார். காரணம் தேவர் மகன் படத்திற்கு பிறகு வடிவேலு தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருப்பார் என அனைவர் முன்னிலையிலும் பாராட்டினார். கமல் சார் ஒரு தீர்க்கதரிசி அவர் வாக்கு அப்படியே பலித்தது. இசக்கி கேரக்டர் நான் கடைசியாக நடித்த மாமன்னன் படம் வரை பிரதிபலித்தது. எனவே நான் கமல் சாறை சாகும் வரைக்கும் மறக்கவே மாட்டேன் என அந்த பேட்டியில் வடிவேலு கூறியது தற்போது வைரலாகி வருகிறது.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?