கமல் நடிக்கும் 237வது படம்… இணைந்தார் தேசிய விருது வென்ற பிரபலம்!
Author: Udayachandran RadhaKrishnan13 September 2025, 6:02 pm
நடிகர் கமல் ஹாசன் நடித்த சமீபத்திய படங்கள் இந்தியன் 2 மற்றும் தக் லைஃப் பாக்ஸ்ஆபிஸில் பெரும் தோல்வியை சந்தித்தன.
இதையடுத்து, லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து கமல் நடிக்க உள்ளதாக திரை வட்டார தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், கமலின் 237-வது படத்தை பிரபல சண்டை பயிற்சியாளர்கள் அன்பறிவ் சகோதரர்கள் இயக்க உள்ளனர்.

இந்நிலையில், தற்போது இப்படம் தொடர்பான அதிரடி அப்டேட் வெளியாகியுள்ளது. தேசிய விருது பெற்ற திரைக்கதை ஆசிரியர் ஸ்யாம் புஷ்கரன், கமலின் கேஎச் 237 படத்தில் இணைந்துள்ளார்.
ஸ்யாம் புஷ்கரன், கும்பலாங்கி நைட்ஸ், ஜோஜி, மஹேஷிண்டே பிரதிகாரம் போன்ற படங்களுக்கு வசனம் எழுதியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
