அரசியல் புள்ளிகளால் அதை இழந்து விட்டேன் : பகீர் கிளப்பிய கங்கனா..!

Author: Vignesh
19 May 2023, 5:30 pm

பாலிவுட் திரையுலகில் சர்ச்சை நாயகியாக இருக்கும் நடிகை கங்கனா ரனாவத் தமிழிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது சந்திரமுகி 2 திரைப்படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்திருக்கும் நடிகை கங்கனா ரனாவத்தை பற்றிய பேச்சு தான் இப்போது பரபரப்பை கிளப்பி உள்ளது.

kangana ranaut - updatenews360

பி வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்து வரும் சந்திரமுகி 2 திரைப்படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தற்போது நடித்து வருகிறார். இவர் எப்போதுமே ஒரு சர்ச்சை வளையத்தில் இருக்கும் நடிகை என்பது அனைவரும் அறிந்த விசயம் தான். நடிகை கங்கனா ரனாவத் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் 16 வயதிலேயே வீட்டை விட்டு ஓடி வந்ததாக அவரே தெரிவித்துள்ளார். பிறகு வெளியில் தங்கி வாய்ப்புகளை தேடி வந்த நடிகை கங்கனா ரனாவத்க்கு சினிமா வாய்ப்பும் கிடைத்தது.

chandramukhi-updatenews360

நடிகை கங்கனா ரனாவத் பல சவாலான கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் இவருக்கு வெகு விரைவிலேயே முன்னணி அந்தஸ்தும் கிடைத்தது. இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற கங்கனா ரனாவத் அதிர்ச்சியூட்டும் தகவலை பகிர்ந்துள்ளார்.

Kangana_Ranaut_UpdateNews360

அதில் அவர், தான் சினிமா, அரசியல் என எதுவாக இருந்தாலும் அங்கு நடக்கும் பிரச்சனைகளை பற்றி பேசிவருவதால், அரசியல் தலைவர்கள் சில பேர் தன்னை விளம்பரங்களில் நடிக்க விடாமலும், வாய்ப்பு இல்லாமல் செய்து விட்டார்கள் எனவும், தற்போது ஒரு ஆண்டுக்கு ரூபாய் 30- 40 கோடி வருவாயை இழந்துவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!