லிவ் இன் உறவா? ஆண் நடிகர்கள் எல்லாம் அநாகரீகமானவர்கள்- பகீர் கிளப்பிய சந்திரமுகி நடிகை

Author: Prasad
16 August 2025, 4:27 pm

சர்ச்சை நடிகை

பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரனாவத். இவர் தமிழில், “தாம் தூம்”, “தலைவி”, “சந்திரமுகி 2” ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் ஹிமாச்சல் பிரதேசத்தின் மண்டி பாராளுமன்ற தொகுதியின் எம்பியாகவும் இருக்கிறார். இவர் பேசும் கருத்துக்கள் அவ்வப்போது சர்ச்சையாவது வழக்கம். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட அவர் பாலிவுட் நடிகர்கள் குறித்து ஒரு கருத்தை உதிர்த்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நடிகர்கள் அநாகரீகமானவர்கள்!

“பெரும்பாலான பாலிவுட் ஆண் நடிகர்கள் அநாகரீகமானவர்கள். ஆனால் நான் ஒரு போதும் அவர்களால் பாதிக்கப்பட அனுமதித்ததில்லை. பாலியல் தொல்லை மட்டுமல்ல, படப்பிடிப்பிற்கு தாமதமாக வருவது, நடிகைகளை கீழ் தரமாக நடத்துவது, இது போன்ற விஷயங்களையும் சேர்த்துதான் சொல்கிறேன்” என அப்பேட்டியில் பேசியுள்ளார். 

மேலும் அப்பேட்டியில் பேசிய அவர், “டேட்டிங் செயலிகள் மற்றும் லிவ் இன் உறவுகள் இந்திய கலாச்சாரத்தை அரிக்கக்கூடியது. திருமணம் போன்ற குடும்ப அமைப்புகள் மாறாமல் இருக்க வேண்டும். நமது சமூகத்தில் திருமணங்கள் மிகவும் முக்கியம். ஆண் தனது மனைவிக்கு விசுவாசமாக இருப்பதற்கான வாக்குறுதியை அது அளிக்கிறது. 

லிவ் இன் போன்ற விஷயங்கள் பெண்களுக்கு ஏற்ற விஷயங்கள் அல்ல. லிவ் இன் உறவின் போது ஒரு வேளை நீங்கள் கர்ப்பம் ஆகி விட்டால் உங்களை யார் கவனித்துக்கொள்வார்கள்? ஆண்கள் வேட்டையாடும் வேட்டைக்காரர்கள். அவர்கள் எந்த பெண்ணை வேண்டுமானாலும் கர்ப்பமாக்கிவிட்டு ஓடிவிட முடியும்”  எனவும் கூறியிருந்தார். இப்பேட்டி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!